மந்திரியாகவும் இவர் இருந்துள்ளார்.
ஆச்சரியப்படாதீர்கள்.. இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க செல்வாக்கு மிக்க இவர் கடைசி வரையில் சுதந்திரப்போரட்ட வீரர்களுக்கான பென்சன் தொகையான ரூபாய் ஐநூறிலேயே குடும்பம் நடத்தினார். தொன்னூற்றி ஐந்தாம் ஆண்டு, அதாவது தான் வாடகை வீட்டிலிருந்து விரட்டப்பட்ட பிறகு தியாகிகளுக்கான சலுகையாக சிறிய வீடு தரமுடியுமா என்று அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார். கருணையே வடிவான இந்தியப் பேரரசு அந்தத் தியாகியின் கோரிக்கையை அவர் இறக்கும் வரையில் ஏற்றுகொள்ள வில்லை. ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். பஞ்சாயத்து யூனியனில் கவுன்சிலராக பொறுப்பேற்ற இரண்டு வாரத்திலேயே ஆடி காரில் பயணம் செய்யும் மனிதர்கள் மிகுந்த இந்த நாட்டில் மந்திரியாகவும், பிரதம மந்திரியாகவும் இருந்த ஒருவர், ஐநூறு ரூபாய் பணத்திலே சாகும் வரை வாழ்ந்தார். தனது அதிகாரத்தை செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சல்லிக்காசு கூட தனக்கென்று சேர்க்காமல் நேர்மையாக இருந்தார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது உடம்பு சிலிர்க்காமல் இருக்கவில்லை. மொரார்ஜி தேசாய்களும், குல்சாரிலால் நந்தாக்களும் மாண்டு போயிருக்கலாம். ஆனால் அவர்கள் விதைத்து விட்டுப் போன மாண்புகள் இன்னும் மாண்டுவிடவில்லை. ஆயிரம் இடிமுழக்கங்கள், ஆயிரம் எரிமலைகள் தொடர்ந்து தாக்கினாலும் இந்தியாவின் ஆத்மா எந்த அதிர்வும் அடையாமல் இன்னும் ஜீவித்துக் கொண்டிருப்பது போல தேச தர்மம் என்பதும் இன்னும் உயிரோடேயே இருக்கிறது. அதன் நிழலில் சில தலைவர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண வேண்டியது மட்டும் தான் நமது வேலை...
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment