#தமிழ்நாடுசட்டமன்றப்பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்மணி யார்?
• •
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாற்றுப் பேரவைத் தலைவர்களாக தவெக எம்.எல்.ஏ விஜய் சரவணன், சத்யபாமா (தவெக), மதார் பதுருதீன் (தவெக), தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்), காதர் பாட்சா முத்துராமலிங்கம் (திமுக), தளவாய் சுந்தரம் (அதிமுக) ஆகிய 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர் சட்டமன்றப் பேரவைத் தலைவர், துணைத்தலைவர் இல்லாத போது சபையை நடத்துவார்கள்.
#பேரவைத் தலைவர், பேரவைத் துணைத்தலைவர் இல்லாத காரணத்தினால் சத்தியபாமா சட்டப்பேரவையை நடத்தியதை ஏதோ பெரிய சமூகநீதி சாதனை போல தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் தவெகவினர்.
#சத்தியபாமா பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்த்தப்பட்ட முதல் பெண்மணி என்கிற தகவலை ஊடகங்கள் மக்களிடம் பரப்புகிறது. தவறான கருத்துகளை பரப்பிக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள்.
#தவெக IT wing புரட்சியாளர்களுக்கு இந்த தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களிடம் விஜய் நடித்த படங்களை வரிசைப்படுத்தி ஒப்பிக்கச் சொன்னால் நா பிறழாமல் ஒப்பிக்கும் திறமை மட்டுமே உண்டு. ஆனால் ஊடகங்களுக்கும் கடந்த கால அரசியல் வரலாறு தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்.
#தவெக-காரர்களுக்குத்தான் வரலாறு தெரியவில்லை என்றால்....இந்த காங்கிரஸ்காரர்களுக்கு என்ன "நோக்காடு" வந்தது.
#தங்கள் கட்சிக்காரர்கள் பேரவைத் துணைத் தலைவராக இருந்த வரலாறு கூட தெரியாமல் இருக்கிறார்கள்.
#காங்கிரஸ்காரர்கள் கட்சி நடத்துகிறார்களா....இல்லை.....கபடி Team நடத்துகிறார்களா.....?
#ருக்மணிலட்சுமிபதி:
#சீனிவாசராவ் - சூடாமணி தம்பதியினருக்கு, டிசம்பர் 6, 1892ம் நாள், சென்னையில் பிறந்தவர் ருக்மணி.
#1933ல் சென்னை வந்திருந்த காந்திஜியைச் சந்தித்த ருக்மணி. ஹரிஜன சேவைக்காக நிதி வேண்டிய காந்திஜியை ஆதரித்து தன் கை வளையல்களைக் கழற்றித் தந்தவர்.
இந்தியாவில் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகச் சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண்மணியும், தமிழகத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் பெண் அரசியல் கைதியும் ருக்மணி லட்சுமிபதிதான்.
1937ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். சென்னை மாகாண சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக வரலாற்றில் இப் பதவிக்குத் தேர்வான முதல் பெண் ருக்மணி லட்சுமிபதிதான். 15.07.1937 முதல் 1.10.1945ஆம் ஆண்டு வரை இப்பதவியில் இருந்துள்ளார்.
1946ல், தேர்தலில் வென்று பிரகாசம் முதலமைச்சர் ஆனார். அந்த அமைச்சரவையில் ருக்மணி சுகாதாரத் துறை அமைச்சரானார். அந்த வகையில் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் பெண் ருக்மணி லட்சுமிபதிதான். இந்தியாவில், சுதந்திரத்திற்கு முன்பாக அமைச்சர் பதவி வகித்த ஒரே பெண்மணியும் ருக்மணிதான்.
திருமதி. அம்மண்ண ராஜா என்பவரும் 25.5.1946 முதல் 21.4.1952 வரை பேரவைத் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார்.
TVK MLA V Sathyabama sat in the Speaker's chair as a substitute for Thiru JCD Prabhakar & this is being hailed by the Vijay govt as a first.
One must learn history before commenting.
The Tamil Nadu Assembly has had women as #DeputySpeakers before and after Independence.
Rukmini Lakshmipathi was the first woman elected to the Madras Legislature. She was the Deputy Speaker between 1937 and 1939. She was also the first female prisoner in the Salt Satyagraha movement.
#ChodagamAmmannaRaja was the Deputy Speaker between 1946 to 1952. She fought alongside Dr. Muthulakshmi Reddy to pass the historic 1947 bill abolishing the Devadasi system. She later served as Rajya Sabha MP.
Such towering personalities have already sat in the Speaker's chair much earlier. Selecting a woman as a Speaker would have been laudable. But making a woman MLA sit as a substitute and calling it history is laughable.
No comments:
Post a Comment