Wednesday, September 9, 2026

விஜய் தலைமையிலான இந்த சட்டமன்றம்

 விஜய் தலைமையிலான இந்த சட்டமன்றம் மாபெரும் கேலிக்கூத்துகள் நடக்கும் அரங்கம் ஆகிவிட்டது. சினிமா பாட்டுகளைப் பாடுகிறார்கள்! தமிழை ஒழுங்காகப் பேசத் தெரியாமல் தடுமாறுகிறார்கள்! சபை வணக்கம் சொல்வது எப்படி என்று கூடத் தெரியாமல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டமன்ற மாண்புகளோ பழைய வரலாறுகளோ அங்கு நிகழ்ந்த முக்கியமான அரசியல் முடிவுகளோ எதுவும் தெரியாமல் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல அலைகிறார்கள்.. மக்களுக்கான சட்டங்களின் புனித வடிவமாகக் கருதப்படும் சட்டமன்றம் ஏதோ ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது! பாட்டுப் பாடுகிறார்கள் டான்ஸ் ஆடுகிறார்கள்! சினிமா சூட்டிங் ஸ்பாட் போல சில நேரங்களில் தோன்றுகிறது! அவரவருக்குத் தோன்றியதைப் பேசுகிறார்கள்! எந்தத் தகவல்களும் இல்லை! அதை அறிந்து பேசுவதுமில்லை! தொகுதிப் பிரச்சனைகள் குறித்து ஒரு தெளிவும் கூட இல்லாமல் உறுப்பினர்கள் இருந்தால் மக்களின் கதி என்ன ஆவது! அவர்கள் தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் அதிகத் தொடர்புகளும் இல்லை. முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடிய சட்டமன்றத்தின் நேரம் இப்படி வீணாகிக் கொண்டிருக்கிறது. விதியே! விதியே!!இந்தத் தமிழ்ச் சாதியை என்ன செய்யப் போகிறாய்!?

#tvk #tamilnadupoltics #தமிழகச்சட்டப்பேரவையில் #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost

No comments:

Post a Comment

SEP 6