நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் கோதாவரி - பென்னா நதிகளை 182 ஆயிரம் கோடியில் இணைக்க ஆந்திராதிட்டம்.
------------------------------------
ஆந்திர மாநில அரசு நதிநீர் இணைப்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோதாவரி - பென்னா நதிகளை இணைக்க முடிவு செய்தது. இது குறித்து, மத்திய அரசு நிறுவனமான வாக்காசுக்கு தெரிவிக்கப்பட்டது. இரு நதிநீர் இணைப்பிற்கு ரூ. 1 லட்சம் கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்தால், கடவில் வீணாக கலக்கும் 400 டிஎம்சி தண்ணீரை கொண்டு வரலாம் என்று தெரிவித்தது.
ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்தி அதிகளவு செலவாகும் என்பதால், இத்திட்டத்தை மாற்றியமைக்க நீர்பாசன துறையினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் ரோசய்யா, ரகுமான், சுப்பாராவ் ஆகியோர் கூறியதாவது.
400 டிஎம்சி தண்ணீர் எடுத்து செல்ல தான் அதிகளவு பணம் செலவாகும். ஆனால், 300 டிஎம்சி தண்ணீர் எடுத்து செல்ல ரூ. 82 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும். இதனால் போலவரம் கால்வாயில் இருந்து இப்ராகிம்பட்டினம், குண்டூர், வைகுண்டபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு, அணை கட்டி பால பல்லி அருகே 200 டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம்.
இதனால், பிரகாசம், நெல்லூர், ராயலசீமா பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும். நெல்லூர் சோமசீலா அணையில் இருந்து பென்னாநதிக்கு இணைப்பு ஏற்படுத்தலாம். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், 700 கி.மீ. தொலைவுக்கு இந்தியாவிலேயே முதன் முதலில் நதிநீர் இணைப்பு ஏற்படுத்திய பணி என்று பெருமை சேரும்.
அதேபோல், இந்த திட்டம் போலவரம் திட்டத்திற்கு பிறகு செயல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், போலவரம் திட்டம் வரும் 2019ம் ஆண்டு தான் நிறைவு பெறும். எனவே, கோதாவரி - பென்னாநதிநீர் இணைப்பிற்கான கால்வாய் பணிகளை மேற்கொண்டால், போலவரம் திட்டம் முடிவடைந்த பின் இப்பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் கோதாவரி - பென்னா கால்வாய் திட்ட பணி மேற் கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment