Thursday, March 9, 2017

கச்சத் தீவு -1அறியா செய்திகள்

கச்சத் தீவு -அறியா செய்திகள்
-----------------------------
2010ம் ஆண்டு என்னுடைய பழைய பதிவு; முரசொலியும் வெளியானது .
தலைவர் கலைஞர் இதற்கு 
என்னை பாராட்டியதும்உண்டு.கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவராத்த போது நடந்த நிகழ்வுகள் :
-------------------------------------
1 கச்சத் தீவை இலங்கைக்கு மத்திய அரசு தர போகிறது என்று அறிந்தவுடன் அன்றைய தமிழக முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் ஜூன் 24 1974ல் கோட்டையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் அக்கூட்டத்தில் ம.போ.சி பழைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பொன்னப்ப நாடார் , இந்திரா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர் மாரிமுத்து , அதே கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினர் பூதலூர் ஆறுமுகசாமி , மேலவை உறுப்பினர் தாமோதரன் , முஸ்லிம் லீக் சார்ந்த திருப்பூர் மொய்தீன் பார்வர்ட் பிளாக் கட்சியை சார்ந்த சந்தானாம் அப்போது திமுகவில் இருந்து பிரிந்து போன எம்ஜிஆரின் அதிமுகவை சார்ந்த அரங்கநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர் 

கட்ச்சத் தீவை இலங்கைக்கு தரக்கூடாது என்கிற தீர்மானத்தை மா.பொ.சியை தயாரிக்க தலைவர்  கலைஞர் கேட்டுக்கொண்டுள்ளார் ம.போ.சி அவர்களும் தெளிவான தீர்மனத்தை ஆலோசனை செய்து வாசித்த போது அதிமுகவை சேர்ந்த அரங்கநாயகம் உடன்படாமல் மத்திய அரசு கட்ச்சத் தீவை இலங்கைக்கு தரலாம் என்ற வகையில் வெளிநடப்பு செய்தார் .

2 தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்து கட்சி தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் சட்டமன்றத்தை கூட்டி கட்ச்சத்  தீவை இலங்கைக்கு தரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் அந்த தீர்மானங்களோடு தலைவர் அவர்களும் அன்றைய அமைச்சர் மாதவன் அவர்களும் பிரதமர் இந்திராகாந்தி அவர்களை சந்திக்க  டெல்லிக்கு சென்றுள்ளார்கள் .

பிரதமர் இந்திராவை சந்தித்து சட்டமன்ற தீர்மானத்தை வழங்கி கட்ச்சத் தீவை எந்த சூழ்நிலையிலும் இலைங்கைக்கு தரக்கூடாது அது தமிழர் பூமி என்று வழியுறுத்தியுள்ளார்கள் ..  

ஆனால் இந்திராகாந்தி அவர்கள் பிடி கொடுக்காமல் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரான் சிங்கை  சந்தியுங்கள் என்று கூறியுள்ளார். 
தலைவர் கலைஞர் அவர்களும் அவரை சந்தித்து இந்த பிரச்சினைகளின் தன்மையை சொன்ன போது கட்சத் தீவு  பயன்படாத நமக்கெதுக்கு என்று சொன்ன போது தலைவர் கடுமையாக கோபம் பட்டார் . நம் கோரிக்கைகளை எல்லாம் காதில் வாங்காத அரசிடம் ஆத்திரம்பட்டு சென்னைக்கு திரும்பிவிட்டனர் .

இந்த சூழ்நிலையில் தலைவர் கலைஞர் அவர்களின் கோபத்தை சரிபடுத்த மத்திய அரசு வெளியுறவுத்துறை செயலக செயலாளர் கேவல் சிங்கை சென்னைக்கு அனுப்பி வைத்தது 
கேவல் சிங் அவர்களும் சென்னை வந்து சரியான பதில் சொல்லாததால் அப்போது தலைவர் அவர்கள் வந்தீர்க்கள் ! என்னை சந்தித்தீர்கள் உங்களிடம் சரியான பதில் வரவில்லை உங்களை உபசரித்தோம் ! உங்களால் எங்களுக்கு எந்த பயனும் இல்லாமல் ஆகிவிட்டது என்று வேதனையோடு தெரிவித்துள்ளார் .
இதன்பிறகு திமுக சார்பில் தமிழ்நாடு எங்கும் எழுச்சி கூட்டங்களை 29 ஜூலை 1974 அன்று நடத்தப்பட்டது 

3 கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பட்ட அதே காலகட்டத்தில் ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்ட கெஜட்டில் எந்தவித தயக்கமும் இன்றி கச்சத்தீவு இராமநாதபுரம் மாவட்ட பகுதி என்றும் சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்த பகுதி  என்று பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அதிகாரிகளுக்கு முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் உத்தரவிட்டார் அதன்பிறகு தான் அரசு   கெஜட்டில் கச்சத்தீவு  தமிழகத்திற்கே சொந்தம் என்று திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது 

கலைஞர் தலைமையிலான திமுக அரசுதான் ஒப்பந்தம் போட்டு இலங்கைக்கு கொடுத்துவிட்டார்கள் என்ற தவறான குற்றசாட்டை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் இதை மத்திய அரசு செய்தததை  கண்டித்தோம் திரும்ப திரும்ப மேற்சொன்ன விவரங்களை அறியாமல் பேசுவது எப்படி நியாயமாகும்
1983ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இந்திய வரைப்படத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

"உத்தரவு எண் : RCF 23 - 75/83"

இந்த உத்தரவுக்கு பின்னர் தான் கச்சத்தீவு இந்திய வரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. 
ஜெயலலிதா நாடாளுமன்ற உறுப்பினர்.

இன்னொரு செய்தியையும் இந்த இடத்தில் பதிவு செய்யவேண்டும் 
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சொல்லும் ஜெயலலிதா 1984ல் ராஜ்யசபாவில் என்ன பேசினார் தெரியுமா கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டோம் அதைபற்றி பேசி என்ன செய்ய என்றாரா இல்லையா ? அது இன்றளவும் ராஜ்ய சபா ஆவணங்களில் உள்ளன   இந்த விவரங்களை கழகத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் இச்செய்தியினை படியுங்கள் ! பரப்புங்கள் !
#கச்சத்தீவு #இலங்கை

Ks Radhakrishnan
9/3/2017






No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...