Saturday, March 11, 2017

தகுதியே தடை.

அவையில் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்து கொண்டார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் .

தகுதியற்ற, தரமற்றவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் இப்படியான இழிவுநிலைதான். 

தகுதியே தடை. 

மக்களும்,கட்சி தலைமைகளும் நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர்களையும், பொறுத்தமானவர்களையும், ஆற்றலாளர்களையும் அனுப்புவதை விரும்பவில்லையே என்ன செய்ய?

இந்தியாவின் முதல் பட்ஜட்டை தாக்கல் செய்ய நேரு  தமிழகத்திலிருந்த தகுதியான  சண்முக செட்டியாரை  அழைத்தார். ஆனால் இன்றைக்கு என்ன நிலை? 
கையிக்கு அடக்கமானவர்கள்,எதையும் தெரியவார்களைடெல்லிக்கு
அனுப்புவார்கள்.

தகுதியானவர்களை அனுப்பினால் நாடாளுமன்ற பனியில் பிரகாசித்து விடுவார்கள் என்று அச்சப்பட்டால் எப்படி அனுப்புவார்கள்.....?
மக்களும் சரி இல்லை. அரசியலும் சரி இல்லை.
நாடாளுமன்ற மேலவையில் தமிழக எம்பிகள்..

இதுதான் தமிழகத்தின் நிலை..
யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து அனுப்பியதன் விளைவு.. நல்ல தலைவர்களை புறக்கணித்து காசிற்காக சில ஊடகங்களில் பொய்யுரையை நம்பி .. தகுதியில்லாத தரம் கெட்டவர்களை தேர்வு செய்து அதிகாரத்தை கொடுத்ததால் அவர்கள் தங்களுக்கு வேண்டியவரை  மேலவைக்கு அனுப்பி தங்கள் புகழ்பாடவும்  யாரும் எதிர்த்தால் கூச்சலிடவும் சபையை கேலிகூத்தாக்கிறார்கள்.. முன்பெல்லாம் தமிழக எம்பிகள் பேச ஆரம்பித்தால் நாடே கூர்ந்து கவனிக்கும்.. பிரதமர்வரை இருந்து கேட்பார்கள்.. ஆனால் நாடாளுமன்ற மேலவையில் தமிழக எம்பிகள்.. இப்போதெல்லாம் பியூட்டிபுல் காஷ்மீர் பாடல் பாடும் தெரு பாடகரை தேர்வு செய்திருக்கிறோம்..

இதனால்தான் தமிழகம் தாழ்ந்துவிட்டது. இந்த வேதனையை எங்கே போய் சொல்ல?

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...