Friday, March 10, 2017

அத்திக்கடவு அவிநாசி திட்டம் .பவானியும்

 அத்திக்கடவு அவிநாசி திட்டம் .பவானியும் 

அத்திக்கடவு திட்டத்தின் ஆதாரமான பவானி ஆறு  காவேரியில்   பவானி  என்ற நகரத்தின் அருகில் கலப்பதால் பவானி ஆறு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது .
பவானி  ஆறு ,காவேரி ஆற்றின் இரண்டாவது பெரிய நீளமான கிளை  ஆறு ஆகும் . பவானி ஆற்றின் மழைபொழிவுகள் (நீர்ப்பிடிப்பு பகுதி ) கர்நாடகாவில் 4 சதவீதமும் .கேரளாவில் 9 சதவீதமும் ,தமிழ்நாட்டில் 87 சதவீதமும் பெற்று உருவாகிறது . பவானி ஆற்றின் பகுதிகள்  காவேரியின் இரண்டாவது பெரிய உபவாடிநிலமாகும் . 
இதன் பரப்பளவு 6154 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்பு பகுதிதிகளை கொண்டது .பவானி ஆற்றின் மொத்த நீளமான சுமார் 217 கிலோமீட்டரில் 40 கிலோமீட்டர் கேரளாவில் உள்ளது ..இந்த நதி தமிழகத்தின் தாய் நதி என்றே சொல்லலாம் ஏன்  என்றால் பவானி நதியின் 90 சதவீத நீர் விவசாயத்துக்கு பயன்பட்டு வருகிறது . 
நீலகிரி மலை சரிவுகளில் பன்னிரண்டு முக்கிய நீர்வழிப்பாதைகளில் உருவான தண்ணீருடன் , என்றும் வற்றாத சிறுவாணி நீருடன் உருவான தாய் தண்ணீர்    அட்டப்படியில் பவானி ஆற்றில் கலக்கிறது .அடுத்து நீலகிரி மலைச்சரிவில் குன்னுர் ஆற்று நீர் பத்திரகாளியம்மன் கோவில் அருகில் பவானி ஆற்றுடன் கலக்கிறது . அடுத்து மோயாறு சத்தியமங்கலம் பகுதியில் இணைகிறது .
    
கோவை ,நீலகிரி மாவட்டங்களின் தண்ணீரை பிறபகுதிகளுக்கு அள்ளி  தந்த இந்த மக்கள்  இப்பகுதி சார்ந்த கோவை ,திருப்பூர் ,ஈரோடு மாவட்ட பகுதிகள் வறட்சியால் அடிபட்டு நிலைகுலைந்து கிள்ளியாவது உயிர் தண்ணீர்  கொடுங்கள் பிழைத்துக்கொள்கிறோம்  என்று குடும்ப சகிதமாக,மூன்றாம் தலைமுறைகள் வரை   அரசை 40 வருடங்களாக   பிச்சையாக கேட்டுக்கொண்டுள்ளனர் .

www.kousikanathi.com
http://athikkadavu-avinashi-project.blogspot.in

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...