Tuesday, March 7, 2017

1981 நினைவுகள் -ஜெயலலிதா- மதுரை மீனாட்சியம்மன் ஆலையம்.

1981 நினைவுகள் -ஜெயலலிதா-
மதுரை மீனாட்சியம்மன் ஆலையம்.
-------------------------------
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில், 1981-ல் துவக்கத்தில் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா நடன நிகழ்ச்சியும் நடத்தினார். மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பழ.நெடுமாறன் பொறுப்பில் இருந்தார். அவரோடு நான் இருந்தபொழுது, மீனாட்சியம்மன் கோவிலில் குருக்கள் வேதனையோடு சில செய்திகளை சொன்னார்கள்.

ஆங்கிலேயர்ஆட்சிக்காலத்தில்,
மீனாட்சியம்மன் கோவில் நகைகளை பிரிட்டிஷ் அரசர் சார்லஸ் கூட பார்க்கத்தான் முடிந்தது. அதைத் தொட முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா அவர்கள் அந்த நகைகயை பார்க்க விரும்பினார். பார்த்தவுடன், தான் அணிய வேண்டும் என்று விருப்பப்பட்டார். அது முடியாது என்று தடுத்துவிட்டோம்.

கோவில் நகைகள் விக்கிரகத்தின் ஒரு பகுதியே என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் வருத்தத்தோடு தெரிவித்தார்.

மதுரை அழகர் கோவில் சாலை அரசு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து எம்.ஜி.ஆர் இந்த செய்தியை கேட்டவுடன், வருத்தப்பட்டார் என கூறினார்கள்.
ஓய்வுப் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் கோவில் நகைகளை கண்காணித்து சரிபார்க்க  ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவிடம் இதுக் குறித்தான மனுவையும் நெடுமாறன் தலைமையில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ். பொன்னம்மாள், பாரமலை மற்றும் தி.சு.கிள்ளிவளவன், எம்.கே.டி. சுப்பிரமணியம் (இவர், அறியப்படாதவர். ஆனால், பெரியாரின் நம்பிக்கைக்குரியவர், அண்ணா தி.மு.கவை துவக்கும்போது ராபிட்சன் பூங்கா நிகழ்ச்சி அழைப்பிதழில் இவர் பெயரும் இடம் பெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெத்தாம் பாளையம் பழனிசாமி தலைமையில் நடந்தது. தலைவர் கலைஞர் அவர்களை சென்னைக்கு முதன் முதலில் அழைத்து பொதுக் கூட்டம் நடத்தியவர்,) தஞ்சை இராமாமூர்த்தி, அடியேனும் சென்று வழங்கினோம்.
#கோவில்நகைகள்
#திருக்கோவில் - #மதுரை #மீனாட்சியம்மன் ஆலையம்
#ஜெயலலிதா
#Ksrpost
#ksRadhakrishnanpost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07.03.2017

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...