Sunday, November 19, 2017

வாழ்க்கை ஒரு வட்டம்...


Image may contain: 2 people, people standing and outdoor

அன்று எம்.ஜி.ஆர் மறைந்த போது ஜெயலலிதா ," என்னை எம்ஜிஆர் அரசியலுக்கு பயன்படுத்தி விட்டு எனக்கு எந்த அங்கிகாரமும் அளிக்காமல், அரசியல் பாதுகாப்பும் அளிக்காமல் தவிக்க விட்டு சென்று விட்டார்" என்றுக் கூறியது நினைவிருக்கின்றது. ஜெயலலிதா மறைந்ததும் சசிகலாவின் உறவினர்கள் இன்று ," சசிகலாவை நன்கு பயன்படுத்தி விட்டு எதுவும் செய்யாமல் விட்டுச் சென்ற A1தான் ஜெயலலிதா " என்கின்றனர். இவர்களில் யார் நல்லவர்கள். கடந்த 27 ஆண்டுகாலமாக அனுபவித்த அரச மரியாதை, ஆடம்பர வாழ்க்கை என அனைத்தும் யார் அளித்தது? எந்தளவுக்கு முற்பகலில் அனுபவித்தார்களோ அந்தளவுக்கு பிற்பகலில் தாமாகவே வருவது இயற்கையின் நியதி தானே?
பெருவாரியான மக்கள் இவர்களை அங்கிகரிக்கின்றார்கள் என்பதால் இவர்கள் செய்த குற்றங்கள் நியாயமாகுமா? இந்த மக்களை என்ன சொல்ல ...?? இதுதான் அறமா...? ஜனநாயகத்தில் இதுதான் முறையா....?
1995-96 காலக்கட்டங்களில் அத்தனை அரசியக் கட்சிகளும் ஜெயலலிதாவின் மீது ஊழல் பட்டியலை அளித்தன. கவர்னரை சந்தித்து முறைகேடுகள், சட்ட மீறல்கள் என பட்டியல் நெடியது. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மீது தாக்குதல், வழக்கறிஞர் விஜயன் மீதான தாக்குதல், கலெக்டர் சந்திரலேகா மீதி திராவக வீச்சு என செய்த அநீதிகளின் மீது உடன் இருந்தவர் யார். ஜெயலலிதா A1 என்பதில் மாற்றமில்லை. அத்தனை குற்றங்கள் செய்த ஒருவருடன் துணையாக இருந்ததும் குற்றம் தானே. அதற்கு தான் தண்டனை..
செல்வ செழிப்பான குடுமபத்தில் பிறந்து பொதுவாழ்வில் ஈடுபட்டு தங்களின் சொத்துக்களை இழந்த வரலாறு உண்டு. முன்னாள் முதல்வர்கள் ஓமந்தூரார், குமாரசாமிராஜா மற்றும் வ.உ.சி, சேலம் வரதராஜூ நாயுடு இன்னும் சிலர் நல்ல உதாரணமாக வாழ்ந்தவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்வு என்றாலே சம்பாதிக்கவும் கொள்ளையடிக்கவும் செய்யப்படும் தொழில் என்றாகிவிட்டது. அரசியலில் இருப்பவர்கள் சம்பாதிப்பது இயல்பு தானே என்ற மனநிலை மக்கள் மனதிலும் படிந்துவிட்டது.
முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும். எதை விதைத்தார்களோ அதை அறுவடை செய்யத்தான் வேண்டும்.இதையும் ஆதரித்து முட்டு கொடுப்பதுவும் வேடிக்கை மட்டும் அல்ல
மாபெரும் குற்றமும் ஆகும்.


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-11-2017.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...