Friday, November 3, 2017

சென்னைவெள்ளம்...

தலைநகரம் தத்தளிக்கிறது மழையில் ...... 
வெள்ள தண்ணீரால் தடுமாறுகிறது.....

சென்னையில் தன் கடும் சீற்றத்தை தொடர்ந்து  காட்டிக்  கொண்டே இருக்கிறது மழை..

ஆறுகளை முறையாக பாதுகாக்காமல்.
வடிகால்களை நீர்வழிகளை ஆக்கிரமித்து அழித்ததே.....
இந்த பாதிப்பிற்கு  காரணம் திருந்தா சுயநல தகுதியற்ற ஆட்சியாளர்கள்.

இயற்கையை அழிக்க  நினைப்பவர்
களுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்கிறது இயற்கை.....
இயற்கையின் கோபத்திலிருந்து யாரும் தப்ப முடியாது .

தொழில் சாலைகள்,   நிர்வாக கேந்திரங்களை  பொருளாதார மேலாண்மை மாநிலமெங்கும் பரவலாக்கி இருக்கலாம். இதனால் லட்ச கணக்கில் தலைநகருக்கு வந்தோர் ஏராளம் .அதற்கான  அடிப்படை வசதிகள்இல்லை.

இடங்களை மடக்கி தங்களை வளர்த்து
பெரிய மனிதர்களாக பாசாங்கு செய்யும்
மக்கள் விரோத வியாபார கும்பல்தான் இதற்க்கு காரணம். இவர்கள்தான் சிங்கார சென்னையை பாழ்படித்தி அழித்து விட்டார்கள்.அவர்களுக்கும் விழா  எடுத்து  பாராட்டி கொண்டாடிகிறது  சென்னை.

மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை சரியாகவும் செய்யவில்லை .
அதிலும் ஊழல் ....
என்ன செய்ய.....?

#
 
 #சிங்காரசென்னை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-11-2017

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...