Sunday, November 19, 2017

இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகுகிறது.

இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது சுற்றுச் சூழலுக்கு நல்லதல்ல. பெருங்கேடை எதிர்காலத்தில் விளைவிக்கும். கடல் உள்வாங்குகின்றது. கடல் மீன்கள் கரைக்கு வந்துவிடுகின்றன. இப்படியான இயற்கைக்கு மாற்றான செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இவையெல்லாம் எச்சரிக்கை பந்துகளாக தெரிகின்றது. பூமிப்பந்து என்பது ஒரு அற்புத அருட்கொடை.

 இயற்கையோடு இணைந்து நாம் பயணிக்கவேண்டும். இயற்கைக்கு மாறான செயல்கள் இருந்தால் அது பெரும் அபாயத்திற்கு அழைத்து சென்றுவிடும். இமயத்தில் பனிக்கட்டிகள் உருகி தண்ணீராக வெள்ளமெடுத்து வருவது நல்லதல்ல. இதை கவனித்து தடுக்க வேண்டிய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

#பனிப்பாறை_உருகுதல்
#இமயமலை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-11-2017

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...