Monday, November 13, 2017

தகுதியே தடை

என்னதான் நாம் எல்லோரும் நேர்மையான மிடுக்கோடு பணிகளில் இருந்தாலும்; இயற்கை சற்று முரணாக மாறிவிட்டால் நமக்கு தேவையற்ற அவமானங்களே மிஞ்சுகின்றது. நியாயமாக நமது பணிக்கு வரவேண்டிய அங்கீகாரம் தடைபடும் போதும், திட்டமிட்டு நமது இடத்தை பறித்து கீழே தள்ளி நமக்கு கீழே இருந்து நம் உதவிகளை பெற்று நடந்தவர்களை அந்த இடத்தில் தகுதி இல்லாமால் அமர வைப்பது போன்ற செயல்கள் எவ்வளவு தான் உறுதியான போர் குணம் இருந்தாலும் மனதை வாட்டும்...

தகுதியே தடை என்பது வெளிப்படையாகிவிட்டது... தகுதியற்ற, தரமற்றவர்களை பெரும்பான்மையானோர் ஆதரித்துவிட்டாலே நல்லவர்கள், நேர்மையானவர்கள் என்று ஆளுமையோடு பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இன்றைய நாட்டு நடப்பு பணமும், ஜாதிப் பின்புலம் இருந்தாலே போதுமென்ற நிலையில் தலைவர் ஆகின்றார்கள். இது அடிப்படை அமைப்பையே நாசப்படுத்திவிடும்.

இதையும் இயற்கையின் நீதி பார்த்துக் கொண்டு மறுதலிக்காமல் அங்கீகரித்தால் அடிப்படையில் அனைத்தும் சிக்கலாகி கோளாறாகிவிடும். அந்தளவில் தான் நாடும், மக்களும் செல்லும்பொழுது ஜனநாயகத்தில் கூறுகளும், அமைப்பும் எதிர்வினைக்கு அழைத்துச் செல்லும்.
#Nature
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

12-11-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...