Tuesday, November 21, 2017

ப்ரியரஞ்சன் தாஸ்முன்ஷி



Image may contain: 1 person, eyeglasses
திரு. ப்ரியரஞ்சன் தாஸ்முன்ஷி காலமானார் (வயது 72). மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் மூத்த தலைவராவும் இருந்து அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவதில் நிபுணர். அவர் இளைஞராக இருந்தபோது அவரை சந்தித்ததுண்டு.
1970 காலகட்டங்களில் அவரும், ஒரிசா மாநிலத்தின் இராமச்சந்திர ராத் ஆகியோருடன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது உடன் பயணித்தேன். 1974இல் குற்றாலத்தில் இருவரும் தங்கினார்கள். அப்போது அருவியில் குளித்து ரசித்த நினைவுகள் எல்லாம் மனதில் வருகின்றன. கோவில்பட்டி காரசேவும், கடலைமிட்டாயும், இனிப்பு பூந்தியும் அப்போது இவ்வளவு பிரபலம் கிடையாது. அதை ருசித்து பாராட்டியதும் உண்டு. பல சமயம் டெல்லிக்கு போகும்போது அதை வாங்கிவரச் சொல்வதும் உண்டு. அவருடைய தொடர்பு 1979, 80 வரை நீடித்தது.
மேற்கு வங்க அரசியலில் இவர் காங்கிரஸ் கட்சியில் பிராணப், சித்தார்த
சங்கர் ஆகியோர்க்கு எதிராக இருந்தார்.

பழ.நெடுமாறன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பின்னர் இதுபோன்ற டெல்லி தொடர்புகளெல்லாம் குறைந்துவிட்டது. ப்ரியரஞ்சன் தாஸ்முன்ஷி அவர்களை பின்னொருமுறை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நீங்களெல்லாம் அரசியலில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டாமா என்று அக்கறையோடு கேட்டதுண்டு.
#PriyaRanjan Das Munshi
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
21-11-2017

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...