Thursday, August 17, 2023

#*எனதுசுவடு-பகுதி 33* கே. எஸ். ராதாகிருஷ்ணன் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

#*எனதுசுவடு-பகுதி 33*  
கே. எஸ். ராதாகிருஷ்ணன்  தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார். 

*நதி தேங்கி நிற்பதில்லை*
*நகர்ந்து கொண்டே இருக்கிறது*
*நிகழ் கணத்திற்குள்* 
*காலத்தை நகர்த்தியபடி*
*பயணித்துக் கொண்டே இருக்கிறது*
*அதற்கு தெரிவதெல்லாம்* 
*அந்த ஒற்றை கணம் மட்டும் தான்*

*வருகிற தடைகள் பற்றி*
*கவலை கொள்வதுமில்லை*
*பின்வாங்குவதுமில்லை*
*தளர்ந்து போவதுமில்லை*
*உடைந்து போவதுமில்லை*
*பயணித்தபடியே இருக்கிறது*

தடைகள் வருகிறபோது 
மாற்று வழி தேடி பயணிக்கிறது
கீழே வந்து குறுக்கிட்டால்
மேல் நோக்கி பயணிக்கிறது
மேலே வந்து குறுக்கிட்டால் 
கீழே புகுந்து பயணிக்கிறது
கீழும்மேலும் குறுக்கிடுகிறபோது
பக்கவாட்டில் வளைந்துவளைந்து 
இண்டுஇடுக்கிலெல்லாம்
பயணத்தை விடாமல் தொடர்கிறது

அணை போட்டு தடுக்க முனைகிறபோது 
உயிர் சக்தியை உயர்த்திச் சென்று
அதனை கடந்து செல்ல யத்தனிக்கிறது
மடையை திறக்க வைக்கிறது

புதிதாய் முன் விரிகிற பாதையில்
மகிழ்வாய் பயணம் தொடர்கிறது
காலத்தை நிகழ் கணத்திற்குள்
பரிபூரண விழிப்புணர்வோடு 
தக்க வைத்துக் கொள்கிறது

செயலற்ற செயலை விதைத்தபடி
விடாமல் பயணிக்கிறது
சரி தவறென்று எதுவுமில்லை
நிறமற்ற தெளிவிருக்கிறது
ஜீவிதத்தின் புரட்சியிருக்கிறது
மகிழ்வின் வித்துகள்
நீரோட்டத்தில் விருட்சமாய் 
மிதந்தபடி பசுமை விரிக்கிறது
விளிம்பற்ற அகவெளியெங்கும்

அதற்குள் சிறிதென்றும் பெரிதென்றும்
எதுவும் இல்லை
நதி எப்போதும் நதியாகவே 
பயணித்துக் கொண்டிருக்கிறது.
••••
#kamarajar #kamaraj #radhakrishnan
#kamarajar #kamaraj #radhakrishnan #ksr, #ksrvoice, #radhakrishnan, #yenadhusuvadu,#ஸதாபனகாங்கிரஸ்
#தமிழக_1970_அரசியல் #தமிழகஅரசியல்
#தமிழ்நாடு #tamilnadu_poltics

#ksrvoice
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
17-8-2023.

https://youtu.be/lpL1rAyBJ_A

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...