#*திருநெலவேலி மாவட்டம் வீரவாநல்லூர் செடிபுட்டாசேலை, #*புவிசார்குறியீடு*
—————————————
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும். அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. திருநெலவேலி மாவட்டம், வீரவாநல்லூர் செடி புட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் குறித்து எழுதியிருந்தேன்.
தனி மவுசு வீரவநல்லூர், வெள்ளாங்குளி, புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சௌராஷ்டிரா சமுதாய மக்களால் செடி புட்டா சேலை கைத்தறி நெசவு மூலம் தயார் செய்யப்படுகிறது. சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக அந்த பகுதியில் அவர்கள் அந்த சேலையை உற்பத்தி செய்து வருகின்றனர். சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அல்லது தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செடி புட்டா செயலை முழுக்க முழுக்க கைத்தறி நெசவு மூலம் தயாரிக்கப்படுகிறது. செடியும் பூக்களும் நிறைந்ததாக காணப்படும் அந்த சேலை வெயில் காலத்தில் குளுமையாகவும் குளிர்காலத்தில் சற்று வெப்பமாகவும் உடுத்துவதற்கு இதமாக இருப்பதால் அதற்கு என தனி மவுசு உள்ளது.
செடி புட்டா சேலை தயாரிக்க மூன்று நாட்கள் வரை ஆகிறது. அந்த ஒரு செயலுக்கு 443 கூலியாக சங்கம் மூலம் வழங்கப்படுகிறது. அதன் விற்பனை விலையாக 900 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் இந்த சேலை 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்த ஊர் அருகே,பத்தமடை பாய்க்கு அடுத்தபடியாக இரண்டாவதாக நெல்லை மாவட்டத்தில் தயாரிக்கப்படும் செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு இந்த வட்டாரத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய் முன்பே கிடைத்திருப்பதும் பெருமையை சேர்த்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி இந்திய அரசு இதழில் அதற்கான அறிவிப்பு மத்திய அரசு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புக்கு எந்த ஒரு எதிர்ப்பும் வராததால் அந்த சேலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
#திருநெலவேலிமாவட்டம்_வீரவாநல்லூர்_செடிபுட்டாசேலை, #புவிசார்குறியீடு
Tirunelveli districtதிருநெல்வேலிAmbasamudram
வீரவநல்லூர்
#கேஎஸ்ஆர்போஸட்
#KSR_Post
2-8-2023.
No comments:
Post a Comment