Wednesday, August 30, 2023

இதுதான் இப்படித்தான் என் அரசியல்…

என் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வராது. உணமையான அரசியலுக்கு இறுதி இல்லை… பணம்-ஓட்டு, காசிசில் சம்பளமாக கொடுத்து கூட்டப்படும் கூட்டம் என்பவை வியாபாரம் (வியல் + பாரம்) தரகு அரசியல் என்ற தளத்தில்  நான இல்லை என்பதுதான் மெய்.
நேர்மையான பலம் வாய்ந்த அரசியல் கொள்ளவதான்  என்றும் இருக்கும். இந்த நிலையில காலம் என்னை அடி பாதாளம் தள்ளினாலும் இயற்கையின் நீதி கைகொடுக்கும்…

சோகங்கள் நெஞ்சோடு இருக்கும் ஆனா மனத்திடத்தோடு சிரிக்காத நாள் இல்லேயே!

நிலப்புலத்தில்
நெடுந்தூரம்
பயணிக்கும் போது…

பேரிருளில்
திசைகாட்டிக் கொண்டு 

அப்படித்தான்
எல்லோருக்கும்
வாழ்வில்
ஒரு விண்மீன்
இருக்கக்கூடும்

அதற்கு
இருள வேண்டும் 
இருளை விரும்ப வேண்டும்
இருளால் நிரம்ப வேண்டும்
இருளுக்கப்பால்
ஒரு வாழ்விருப்பதை
நம்ப வேண்டும்
 பயணம் செய் 

சிலரின் புரிதல் அற்ற கருத்துகளுக்கு என் பதில் இது.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-8-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...