••••
கடந்த 1993 -1996 வரை, கொடியன்குளம்
ஜாதி மோதல் உட்பட ; தென் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து கூட நிறுத்தப்பட்டு; நெல்லை, தென்காசி,சங்கரன்கோவில் ,
கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, ராஜபாளையம். சாத்தூர்,விருதநகர், மதுரை, தேனி, சிவகங்கை. இரமநாதபுரம் வரை பல பகுதிகள் பெரும் அளவு பாதித்தது. எங்கும் கலவரம்,வெட்டு, குத்து,கொலைகள் என……
இப் பகுதிகளை மதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பொன் முத்துராமலிங்கம், ச. தங்கவேலு மற்றும் நான் உள்ளிட்ட மூவர் குழு பாரவை இட்டதும் உண்டு.மற்ற கட்சிகளும் இதில் அமைதி திரும்ப
கடமைகள் ஆற்றின.
திமுக -கலைஞர் ஆட்சியில் இது குறித்து 1996 இல் உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ரத்ன வேல்பாண்டியன் தலைமையில் அமைந்த அறிக்கையில் ஜாதி கலவரங்களை தீர்வு காண பல
பரிந்துறைகள் இருந்தனவே…
இரு முறை திமுக ஆட்சியில் அந்த பல பரிந்துறைகள் எதுவும் செய்யலே…
அந்த அறிக்கை மூலம் அமைந்தவை;
1) நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2000-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2,100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. இது செயல் பாட்டில் இல்லை
2)கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் கிடைக்க உள்ளது. நெல்லை கங்கைகொண்டானில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. பல வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து புதிய நிறுவனம் தொடங்கப்பட்டு 500 மென்பொருள் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர அதுவும் மிக தாமதமாக மே மாதம் 2019ல்தான்செயல்பட்டது.
இப்படி பல விடயங்கள்…
நீதிபதி ரத்னவேல்பாண்டியன் கமிஷன் அறிக்கை நகல் ஒன்று என்னிடம் இருந்ததை வைகோ வாங்கினார். இந்த அறிக்கை எங்கும் இப்பொழுது கிடைக்கவில்லை.
இன்று நீதிபதி நண்பர் சந்துரு
ஆயவு செய்து என்ன சொல்ல போகிறோ….?
அந்ததந்த நேரத்துக்கு மக்கள் வலிகளை ஆற்ற அரசு அறிவிப்புகள்…
அவ்வளவுதான்.
அறிக்கைகள் பெற்று அச்சு அடித்து சட்மன்றத்தில் வைக்கும் சம்பிரதாயம் - formality . இவை முடிந்த பின் செயலற்று அறிக்கைகள் கிடப்பில் போடப்படும்.
#தென்தமிழகத்தில்_ஜாதிகலவரம்_1995_1996
#நீதிபதி_ரத்னவேல்பாண்டியன்_குழு_அறிக்கை_1996
#Justice_Rathnavelpandiyan_commission_Report.
#தெனமாவட்ட_சாதிகலவரங்கள்
#நாங்குநேரி_தொழில்நுட்பபூங்கா.
#கங்கைகொண்டான்_தகவல்_தொழில்நுட்பபூங்கா
#Nanguneri
#நாங்குநேரி
#நீதிபதிசந்துருகமிஷன்
#Justice_Chandrucommission
#taminadu #tamilnadunews
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
13-8-2023.
No comments:
Post a Comment