Friday, August 4, 2023

#*சுழன்றும் ஏர் பின்னது உலகு*….. *Jai Kisan! Jai Jawan*!!



—————————————
ஒரு *சம்சாரி* செருப்புக் கால்களால் கூட நடக்க நினைக்காத நிலத்தில் அதன் பயிரில் அதன் உயிரில் அசூர இயந்திர வண்டிகளை ஏற்றி வதைத்து அழித்துக்கொண்டிருக்
கிறார்கள் அங்கே...

சராசரியாக ஒரு மூட்டை நெல்லில் 40 கிலோ அரிசி வரும். நொய்யும் தவிடும் தனி.

ஒரு ஏக்கருக்கு சராசரியாக 25-30 மூட்டைகள் நெல் வரும். அதாவது 1200 அரிசி (மட்டும்) அதாவது 25 கிலோ அளவு கொண்ட 48 முடைகள். அதாவது ஒரு நான்கு பேர் கொண்ட 48 குடும்பங்களின் ஒரு மாதத்திற்கான அரிசி. (இதிலும் நொய், தவிடு தனி)

NLC அங்கே 25000 ஏக்கர்களை குழி தோண்டிப் புதைக்கப்போகிறதாம். எத்தனை லட்சம் குடும்பங்களின் எத்தனை எத்தனை மாதத்திற்கான அரிசி... ?

அமெரிக்காவின் அரிசித்தட்டுப்பாடு விரைவில் தென்னகத்தின் நெற்களஞ்சியத்திலும் எற்படும் காலம் தூரத்திலில்லை.

வரும் காலங்களில் இதுவும் பள்ளியில் ஒரு கட்டாய பாட திட்டமாக இருந்தால் மட்டுமே விவசாயம் காக்கப்படும்...... குழந்தை பருவத்தில் இருந்து ஓர் விவசாயி உருவாக்கப்பட வேண்டும்... இதைதான் ராஜாஜி அன்றைய மத்திய அரசு அமைத்த குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி
விரும்பும் தொழிலை படிக்கலாம் என்றார். அதை தவறாக புரிந்து குலக்கல்வி என எதிர் வினைகள் கடுமையாக ஏற்பட்டது . பிற் காலத்தில் 1968  அரசு உயர் நிலை பள்ளியில் அன்றைய 10- SSLC என இறுதி வகுப்புகளில் விவசாயம், நெசவு, பொறியியல் -லேத் என, அச்சு தொழில் என
விருப்பாடமாக (Elective) இருந்தது.

சோறு வரும் வழி:

01. வயல் காட்டைச் சீர்செய்தல்
02. ஏர் பிடித்தல்
03. உழவு ஓட்டுதல்
04. பரம்படித்தல்
05. விதை நெல் சேகரித்தல் 
06. விதை நேர்த்தி செய்தல்
07. விதைகளை நீரில் ஊற  
       வைத்தல்
08. நாற்றங்காலில் விதைத்தல்
09. நாற்றாக வளருதல்
10. நாற்று எடுத்தல்
11. முடிச்சு கட்டுதல்
12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்
13. நடவு நடுதல்
14. களையெடுத்தல்
15. உரமிடுதல்
16. எலியிடம் தப்புதல்
17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்
18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்
19. கதிர் முற்றுதல்
20. கதிர் அறுத்தல்
21. கட்டு கட்டுதல்
22. கட்டு சுமந்து வருதல்
23. களத்துமேட்டில் சேர்த்தல்
24. கதிர் அடித்தல்
25. பயிர் தூற்றல்
26. பதறுபிரித்தல்
27. மூட்டை கட்டுதல்
28. நெல் ஊறவைத்தல்
29. நெல் அவித்தல்
30. களத்தில் காயவைத்தல்
31. மழையிலிருந்து பாதுகாத்தல்
32. நெல் குத்துதல்
33. நொய்யின்றி அரிசியாதல்
34. அரிசியாக்குதல்
35. மூட்டையில் பிடித்தல்
36. விற்பனை செய்தல்
37. எடை போட்டு வாங்குதல்
38. அரிசி ஊறவைத்தல்
39. அரிசி கழுவுதல்
40. கல் நீக்குதல்
41. அரிசியை உலையிடல்
42. சோறு வடித்தல்
43. சோறு சூடு தணிய வைத்தல்
44. சோறு இலையில் இடல்.

இத்தனை தடைகளைத் தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவதும் எளிதான  போக்கும் நல்லதல்ல…

*வாழ்க விவசாயம்!*
*வெல்க விவசாயி!!*

#ksrpost
4-8-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...