Tuesday, August 1, 2023

#காந்தி,நேரு,தாகூர் , வாஜ்பாய்போற்றிய கன்னியாகுமரி மட்டுப்பழம். பெற்றது புவிசார் குறியீடு.

#காந்தி,நேரு,தாகூர் ,
வாஜ்பாய்போற்றிய கன்னியாகுமரி மட்டுப்பழம். பெற்றது புவிசார் குறியீடு.   


—————————————
கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய தமிழக 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

மட்டி வாழைப்பழம் மாவுத்தன்மை மிகுதியாக காணப்படுவதால் சிறுகுழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கப்படுகிறது. அளவில் சிறியது.   இது மற்ற வாழைப்பழங்களை விட இனிப்பு சுவை மிகுந்து காணப்படுவதோடு சற்று மணமாகவும் இருக்கும் ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் நுனிப்பகுதி சற்று நீண்டிருக்கும்.காந்தி, நேரு,தாகூர், வாஜ்பாய்  போற்றிய மட்டுப்பழம்.   

நேரு பிரதமராக இருந்தபோது திருவனந்தபுரத்துக்கு  வந்த போது விருந்தில் அவருக்கு குமரி மாவட்ட ஸ்பெஷல் மட்டிப்பழம் வழங்கப்பட்டது. சாப்பிட்ட நேரு ,”ஆஹா. அருமை..இவ்வளவு  தித்திப்பு சுவையில் வாழைப்பழம் நான் சாப்பிட்டதே இல்லை!” என மகிழ்சியாக சொன்னார். நேருவுக்கு குமரிமாவட்ட மட்டிப்பழம் திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்டதாம். 

தமிழ் பாரம்பரிய அடையாளங்கள் போற்றுவோம்.

#கன்னியாகுமரி_மட்டி_வாழைப்பழம்,
#புவிசார்குறியீடு 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Posts
1-8-2023


No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...