Friday, August 11, 2023

#*ராஜாஜி,சாஸ்திரி,கைரோன்,சிஎஸ்,அழகேசன்,ஹெக்டே என வேறு காரணங்களுக்கு பதவி விலகினார்கள்*…. *ஊழல்வழக்கு சிறை கைதி செந்தில்பாலாஜி தார்மீகமாக பதவி விலகல் இல்லை*. *இது வரலாற்று பிழை ஆகிவிடும்*

#*ராஜாஜி,சாஸ்திரி,கைரோன்,சிஎஸ்,அழகேசன்,ஹெக்டே என வேறு காரணங்களுக்கு பதவி விலகினார்கள்*….

*ஊழல்வழக்கு சிறை கைதி செந்தில்பாலாஜி தார்மீகமாக பதவி விலகல் இல்லை*.

*இது வரலாற்று பிழை ஆகிவிடும்*
—————————————
1)ராஜாஜி முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார் 

2)கடந்த1956- நவம்பர் 23-ந் தேதி. சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெருமழைக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்து கொண்டிருந்தது. அரியலூர்- கல்லாகம் இடையேயான மருதையாற்று பாலத்தை ரயில் கொட்டும் பேய்மழைக்கு நடுவே கும்மிருட்டில் இரைச்சலெடுத்து ஓடும் காட்டாற்றை விஞ்சும் மரண ஓலங்களே எங்கும்.. மருதையாற்று பாலம் பலமிழந்து ஆற்றுக்குள் மூழ்க தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளும் அத்தனை பயணிகளுடன் அடுத்தடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி இந்து துயரத்தை தனது கடமை தவறியது பதவி தானே முன வந்து பதவி விலகினார்.

3)பிரதாப் சிங் கைரோன் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த போது (அப்போது பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது ) 1964 ஆம் ஆண்டில், ஊழல் (தாஸ் கமிஷன்)விசாரணைக் கமிஷனின் அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருந்து கைரோன் ராஜினாமா செய்தார். 

4) கடந்த 1965ஆம் ஆண்டு மத்திய உணவு அமைச்சராக இருந்து சி.சுப்பிரமணியம், மத்திய ராஜாங்க(மாநில) அமைச்சர் (பெட்ரோலியம் மற்றும் இரசாயனங்கள்) இருந்த ஓ.வி.அழகேசன் அப்போது சென்னை மாநிலத்தில் (தமிழகம்) மாணவர்களின் இந்தி போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் அமைச்சர் பதவிகளை 11 பிப்ரவரி 1965 அன்று துறந்தார்கள்.

5) கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே கர்நாடக உயர்நீதிமன்றம் இவர் அரசின் மீது சாராய பாட்டில் வழக்கில் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து இவர் தன் முதலமைச்சர் பதவியில் இருந்து 13 பிப்ரவரி 1986 அன்று விலகினார். ஆனால் மூன்று நாள் கழித்து 16 பிப்ரவரி அன்று பதவி விலகலைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதால் இவர் தன் பதவியை விட்டு விலகினார். 

6) வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சராகப்
 இருந்த சேடபட்டி முத்தையா, மிக குறுகிய காலமே அப்பதவியில் இருந்த அவர், சென்னை நீதிமன்றத்தில் நடந்த ஊழல் வழக்கு காரணமாக 1998 பதவி விலக நேரிட்டது.


முன்பு; 
•கிருஷ்ணமேன்ன் (ஜீப்ஊழல்), மேனன் நெறிமுறையைத் தவிர்த்து ரூ. ஜீப்களை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனத்திற்கு 80 லட்சம் ரூபாய். ஜீப் ஊழல் வழக்கை நீதி விசாரணைக்காக முடித்துவிட்டதாக உள்துறை அமைச்சரும் இந்திய அரசாங்கமும் 30 செப்டம்பர் 1955 அன்று அறிவித்த கோவிந்த் பல்லப் பந்த், அனந்தசயனம் அய்யங்கார் தலைமையிலான விசாரணைக் குழுவின் பரிந்துரையை புறக்கணித்தார் .  அவர் அறிவித்தார், "அரசாங்கத்தைப் பொறுத்த வரை இந்த விஷயத்தை முடித்து வைப்பதற்கு அது முடிவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் திருப்தியடையவில்லை என்றால் அவர்கள் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக்கலாம்". விரைவில், 3 பிப்ரவரி 1956 அன்று, மேனன் நேரு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக சேர்க்கப்பட்டார்.  பின்னர், மேனன் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக பாதுகாப்பு அமைச்சரானார். இருப்பினும், திரு மேனனின் தனிப்பட்ட நேர்மையை சந்தேகிக்க எந்த ஆதாரமும் இல்லை.

•டிடிகே, (எல்ஐசி ஊழல்), பிப்ரவரி 18, 1958 அன்று, மத்திய அரசின் அப்போதைய நிதியமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி (TTK) தனது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரிதாஸ் முந்த்ராவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 1.26 கோடி ரூபாய் முதலீடு செய்த எல்ஐசி-முந்த்ரா ஊழல் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்தது.

 •கலிங்கா டியூப்ஸு ஊழல் 1965 ஆம் ஆண்டில், ஒரிசா முதல்வர் பிஜு பட்நாயக் (முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தை) அரசாங்க ஒப்பந்தத்தை வழங்குவதில் தனது தனியாருக்குச் சொந்தமான நிறுவனமான கலிங்கா டியூப்ஸுக்கு ஆதரவாக இருந்தார் என்பது தெரிந்த பிறகு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

•பின்பு,வாழப்பாடி1998இல் ராம்மூர்த்தி( காவேரி நதி நீர் சிக்கல்)
  
இப்படி பல நிகழ்வுகள் உண்டு. திமுக அமைச்சர் பூங்கோதை வரை….

ஆனால், செந்தில் பாலாஜி புழல் சிறையில் ஊழல் வழக்கில் சிறை கைதி. இன்னும் துறை இல்லா அமைச்சர்.தான் ஊழல் குற்றம் செய்யவில்லை என வழக்கில் நிருபித்து பின்
அமைச்சராக வரட்டும். இதில் என்ன உச்ச நீதி மன்றம் சொல்லட்டும். தார்மீகப் பொறுப்பை, கண்ணியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தவறான முன் உதாரணம் ஆகி விட கூடாது..

'அரசியலில் புரியாத புதிர்கள்' என்னும் தலைப்பில் புதிய தொடர் உங்களுக்காக. அரசியலில் விடை தெரியாத பல விடயங்கள் பற்றி பேசிவருகிறார் த கே எஸ் இராதாகிருஷ்ணன்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க வேண்டிய கட்டாயம் என்ன?

#அரசியலில்_புரியாத_புதிர்கள்
#ஊழல் #சிறைகைதி_செந்தில்பாலாஜி
#SenthilBalaji

#ksrvoice
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
11-8-2023.

youtu.be/nzgm8jztG4A

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...