Thursday, August 17, 2023

Sangam

ராஜ்கபூர் வைஜெயந்திமாலா, ராஜேந்திர குமார் ஆகியோரின் முக்கோணக் காதல் கதையாக அமைந்த ரொமாண்டிக் ஹிட்டான 'சங்கம்' இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. படத்தின் அழகான பாடல்கள் இனி வரும் காலங்களிலும் பசுமையாக இருக்கும்.
ராஜ்கபூரின் 'சங்கம்' திரைப்படம் சென்னை  சாந்தியில் 100 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டு இருந்தது. அதே நேரத்தில் சிவாஜியின் சொந்தப்படமான, புதிய பறவை வெளிவர, அதை சாந்தியில் திரையிடலாம் என்று இருந்தனர். அதை அறிந்த ராஜ்கபூர், நேரடியாக சிவாஜியிடம் பேசினார். 'சென்னையில் சாந்தி போல் வேறு வசதியான திரையரங்குகள் இல்லை. எனது சங்கம் படத்தை உங்கள் தியேட்டரைவிட்டு எடுத்துவிட வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார். உடனே புதிய பறவை திரைப்படத்தை, சாந்திக்குப் பதிலாக அருகில் உள்ள 'பாரகன்' தியேட்டரில் சிவாஜி வெளியிட்டு இருக்கிறார். அத்தகைய பெரிய மனதுக்காரர்.


No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...