Tuesday, August 29, 2023

#*ஓணத்திருநாள்* #*Onam -Tamil*



*****************கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்





மாயோன் மேய ஓண நன்னாள்” 
- *மதுரைக் காஞ்சி* 

எதிரிகளின் கூட்டத்தைக் கடந்து அழிக்க வல்லவன் தொங்கு மாலை அணிந்த முல்லை நிலத் தலைவன் மாயோன், அவனைக் கொண்டாடும் சிறப்பு நாளான ஓணம் ஒரு நன்னாள். (மாயோன் முன்னாளில் அரசனாகவும் பின்னாளின் விஷ்ணுவாகவும் கருதப்பட்டிருக்கிறார்)
            அறுவடைத் திருநாள் என்றழைக்கப்படும் ஒணத்திருநாள் இன்று. மலையாள ஆண்டான கொல்லவர்ஷத்தில் சிங்கம் மாதத்தில் ஓணவிழா கொண்டாடப்படுகிறது.  ஆயிரமாண்டுகளுக்கு மேல் கொண்டாடப்படும் இவ்வோணப் பண்டிகையில் ஓணத்தப்பன் என்றழைக்கப்படும் மகாபலியை வரவேற்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. 









        தமிழர் பண்பாட்டிலும் ஓணத் திருவிழா கொண்டாடியதற்கான இலக்கிய சான்றுகள் உள்ளன. 

       ஒரு வாரமாக கேரளத்தின் கொச்சி முழுவதும் பூக்களின் விற்பனை அமோகமாக நடக்கிறது. இன்ஃபோ பார்க்கில் உள்ள எல்லா அலுவலகங்களிலும் ஓணப் பரிபாடி. கேரள உடையுடுத்தி அலைமோதும் சேச்சியர்கள் சேட்டன்களின் கூட்டமென ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. பல கோயில்களிலும் பாட்டு, திருவாதிரை நடனமென கலைகட்டியிருக்கிறது. சிறிய குழந்தைகளெல்லாம் வேட்டியுடுத்தியும் முண்டு கட்டியும் போகும் அழகு கண்கொள்ளாக் காட்சியாகும். 
        எல்லாவற்றிற்கும் மேலாக மதங்கள் கடந்து அனைவரும் கொண்டாடும் இவ்வோணப் பண்டிகையில் ஒற்றுமையின் வாசமடிக்கிறது.


திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் . ஆவணி மாத திருவோணம் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது .தற்சமயம் கேரளா மட்டும்  ஓணம் பண்டிகையை கொண்டாடி வந்தாலும் இந்த பண்டைய தமிழகம் முழுவதும் கொண்டாடி இருக்கலாம் என்றே கருத படுகிறது . 

மஹாபலிபுரம் , திருக்கோவலூர்  , திருஊரகம் ( காஞ்சிபுரம் ) உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பண்டைய தொண்டை நாட்டு பகுதிகளில் உள்ள ஆலயங்கள்  திருவிக்கிரமர்  என்ற உலகளந்த பெருமாள் வழிபாடுகளுக்கு சான்றாக உள்ளது . சோழ நாட்டு திவ்யதேசங்களில் காழிச் சீராம விண்ணகரம், பாடலிகவனம் என்று அழைக்கப்படும் சீர்காழி திருவிக்கிரம பெருமாள் கோயில்  உள்ளது . 

பாண்டிய நாட்டு தலைநகர் மதுரையில் உள்ள ஸ்ரீ கூடலழகர் கோயில் பற்றிய " அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வரலாறு"  என்ற கட்டுரையில்  பேராசிரியர் இரா. அரங்கராஜன், எம்.ஏ.பி.டி.அவர்கள் திருமால் பேருருவம் எடுத்துத் திரிவிக்கிரமனாக வளர்ந்து ஒரு திருவடியானது சத்தியலோகம் சென்றபோது நான்முகன் அத் திருவடியை விளக்கிய நீர் விண்ணிலிருந்து வீழ்ந்து வையகத்தைப் புனிதமாக்கியது. அக்காரணத்தால் அதனை வைகை என்று அழைத்தனர். அதனுள் ஒரு பிரிவு கூடலழகருக்கு மாலை அணிவிக்கப் பெற்றது சென்றதால் அதனைக் கிருதமாலை என்று அழைத்தனர். இக்கிருதமாலையினையே வையை என்றும் அழைத்ததாக அறிகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் . 

இன்றும் மதுரை நகர் பகுதியில் கிருதமாலை நதி ஓடி கொண்டு  இருக்கிறது . இந்த நதிக்கரையில் உள்ள ஸ்ரீ கூடலழகர் கோயில் பெரியாழ்வாரோடு மிக மிக தொடர்புடையது .

பெரியாழ்வார் பரதத்வ நிரணயம் செய்த சபை விளங்கிய இடத்தை 'மெய் காட்டும் பொட் டல்' என்று அழைத்தனர் . இங்கு தான் பெருமாள் மீது பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடினார் . 

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு *
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் *
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் *
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 

என்ற பாசுரங்களை சேவிக்கும் பொழுது திருவோணத்திருவிழா பண்டைய தமிழகம் முழுவதும் கொண்டாட பட்டு  இருக்கலாம் என்று தோன்றுகிறது .

இது போல் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயில் சிலம்பாறும், நூபுர கங்கை தீர்த்தமும் இந்த வாமன அவதாரம் என்னும் திருவிக்கிரம அவதாரத்தோடு தொடர்புடையதாக புராண வரலாறுகள் உள்ளது .

தமிழகம் முழுவதும்  திருவிக்ரம அவதாரம் சிறப்பாக கொண்டாட்டப்பட்டு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது .  

அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் . தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய ஓங்கி உலகளந்த உத்தமரை  வேண்டுவோம் .

Celebrating the ancient Hindu  rice harvest festival that is held in the name of the great king Maha_bali, of the daitya lineage, who was known throughout time for providing good governance to the land. It is  called Onam, after its name used in Keralam. It falls on the 22nd nakshatra Thiruvonam in the month Chingam. The earliest Sangam literature mentions it as a popular festival when people come together to thank the gods and welcome the harvest. One of the later ditties associated with Onam goes as follows:

Gangs of lads, playing their bows hoot loudly again and again; All women make their husbands provide wealth and pleasure; All men are wandering hither and thither to present beautiful garments to their women. The festivity of 'Sravana' takes place in Kerala.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...