தமிழர்களின் தொண்மையான ஜல்லிக்கட்டுக்கு போராடுவது சரிதான் .களத்தில் நின்று போராடும் போராளிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.160க்கும் மேலான விவசாயிகளின் கடன் தொல்லையால் மாண்டதற்க்கும் , கொங்கு மண்டலத்தில் நீராதரமாக இருக்கும் பவானி நீர்பிடிப்பு பகுதியில் தடுப்பனை கட்டுகிறது கேரள அரசு.
நீட் தேர்வு பிரச்சினைக்கும் , மீனவர் பிரச்சினைகள் போன்ற பல தமிழக உரிமை பிரச்சினைகள் இதே வீரியத்தை காட்டி குரல் கொடுத்து போராடினால் நல்லது !
தமிழர் கலாச்சாரத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் திரைத் துறையினரின் கருத்தை அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்த வேண்டாம். ஜல்லிக்கட்டிற்கான புரட்சி, பொங்கிப் பெருகுவதால், போட்டிப் போட்டுக் கொண்டு இப்போது அறிக்கையும் பேட்டியும் அளிக்கும் நட்சத்திரங்கள் பலருக்கு, தமிழுணர்வு உண்மையிலேயே உண்டென உறுதியளிக்க முடியாது. ஆகவே, நிழல் கதாநாயகர்களின் வசனங்களை கிடப்பில் விடுவோம். நிஜக் கதாநாயகர்களின் எழுச்சியை தலைப்பில் இடுவோம்...
No comments:
Post a Comment