Sunday, July 24, 2022

Kangaroo courts by media, agenda-driven debates weakening democracy, says CJI

https://indianexpress.com/article/india/cji-nv-ramana-media-attack-judges-speech-8046987/
*True true *
Kangaroo courts by media, agenda-driven debates weakening democracy, says CJI
CJI Ramana also pointed out that there has been an increase in the number of physical attacks on judges and asserted that non-filling up of judicial vacancies and not improving the infrastructure were the main reasons for pendency of cases in the country. https://indianexpress.com/article/india/cji-nv-ramana-media-attack-judges-speech-8046987/
*கட்டப்பஞ்சாயத்து நடத்தும் டிவிகள்*
*அறிவில்லாத பொறுப்பற்ற ஊடகங்கள்*
*ஒளி,ஒலி...ஊடகங்கள் ஜனநாயகத்தின் கேடு*
*உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மனக்குமுறல்கள்*
-----------------------
*ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பேசியதாவது:-*  *டிவி விவாத நிகழ்ச்சிகள், சமூக ஊடக அலசல்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து போல் நடக்கின்றன. இவை நாட்டை பின்னோக்கி இழுத்து செல்கின்றன*. சமூக ஊடகங்களில் சில நேரங்களில் நீதிபதிகளுக்கு எதிரான பிரசாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. நீதிபதிகள் ஒரு சம்பவம் குறித்து உடனடியாக எதிர்வினையாற்றாமல் இருக்கலாம். அவ்வாறு எதிர்வினையாற்றாமல் இருப்பதால், அவர்கள் பலமில்லாதவர்கள், கையாளாகதவர்கள் என்று அர்த்தமில்லை.

அதிநவீன ஊடக அங்கங்களின் வீச்சு அதிகம். ஆனால், அவற்றால் எது சரி எது தவறு எனத்தெரியவில்லை. நல்லது எது கெட்டது எது உண்மையானது எது போலியானது எது என பகுப்பாய்வு செய்ய தெரியவில்லை. ஊடகங்களில் எது வைரலாக பரவுகிறதோ அதை வைத்து ஒரு வழக்கின் போக்கை தீர்மானிக்க முடியாது. *பல ஊடகங்கள் தாமாகவே கட்டப்பஞ்சாயத்து நடத்தி கொண்டிருக்கின்றன.*

போதிய அறிவு இல்லாமல், ஏதோ ஒரு சார்புடன் நடத்தப்படும் விவாதங்கள் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய கேடு. ஊடகங்களில் வெளியாகும் சார்புடைய செய்திகள் ஜனநாயகத்தை பலவீனமாக்குகிறது. இதனால், நீதியை நிலைநிறுத்துவதும் பாதிக்கப்படுகிறது.

நாட்டில் அச்சு ஊடகங்கள் ஓரளவு பொறுப்புடன் செயல்படுகின்றன. *காட்சி ஊடகங்களில் நடக்கும் டிவி விவாதங்கள் பலவும் ஒரு பக்க சார்புடையதாகவும் அரைகுறை தகவலுடைய ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும். காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம். காட்சி ஊடகங்கள் எல்லை மீறி செல்வதாலும், பொறுப்பை உணராமல் செயல்படுவதாலும் ஜனநாயகத்தை இரண்டு அடி பின்னால் இழுத்து சென்று விடுகிறது. காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.* இவ்வாறு அவர் பேசினார்...
என்னைப் போன்றவர்கள் டிவி ஊடகங்களின் குறைகளை சுட்டிக்காட்டும் போது தனிப்பட்ட முறையில் என்னிடம் வன்மமாக வக்கிரமாக பேசுகிறார்கள்.
தற்போது உச்ச  நீதிமன்ற  தலைமை நீதிபதி
 தன் கருத்தை பதிவு செய்துள்ளார் இதற்கு இந்த மானங்கெட்ட டிவி ஊடகங்கள் என்ன பதில் சொல்லப் போகிறது..?? அல்லது இது குறித்து விவாத மேடை அமைத்து விவாதிக்க போகிறதா..? அல்லது  த லைமை நீதிபதி குறித்து பட்டிமன்றம் நடத்த தைரியம் உள்ளதா...? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

ஊடகங்கள் எப்படியெல்லாம் தரம் தாழ்ந்துவிட்டன என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி. ரமணா முன்வைத்த விமர்சனங்களின் சூடு இன்னும் குறையவில்லை. அதற்குள்ளாகவே, யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் காறி துப்பினாலும் ஊடக தர்மத்தை பற்றி எங்களுக்கு கவலையில்லை. தொடர்ந்து ஜனநாயகத்திற்கு விரோதமாகதான் செயல்படுவோம், ஒருபோதும் தங்கள் செயல்பாடுகளை திருத்திக் கொள்ள மாட்டோம் என்று சத்தியம் செய்யும் வகையில்தான் ஊடகங்களின் நிலை இருக்கிறது.


பொதுமக்களுக்கு  பைசாவுக்கு பயனளிக்காத விவாதங்களை மேற்கொள்வது, பொது வாழ்வில் துளியளவும் நேர்மையை கடைப்பிடிக்காதவர்களை அழைத்து விவாதங்களில் மணிக்கணக்கில் கத்த விடுவது போன்ற அறமற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொலைக்காட்சிகள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. வெறும் ஊதியத்திற்காக மட்டுமே, கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால் தங்களின் அதிமேதாவிதனத்தை வெளிப்படுத்தும் விதமாக நெறியாளர்கள் சிலர் விவாதங்களின் போது பேசும் கருத்துகளை கேட்டு, அவர்களுக்கு எதிராக சராசரி மனிதர்கள் கூட முகம் சுழிக்கிறார்கள்.

யார் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன? எங்கள் பிழைப்பில் மண் விழாமல் இருந்தால் போதும் என்ற நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவாதங்கள், அறிவார்ந்த பார்வையாளர்களால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

••••

*ஒரு காலை நேர.. நடைப்பயணத்திற்கு பிறகு, ஒரு டாக்டர்கள் குழு, சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்...*


அப்போது ஒருவர் லேசாக காலை சாய்த்து சாய்த்து தங்களை நோக்கி நடந்து வருவதை, அவர்கள் கண்டார்கள்.


ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து: "அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது.." என்றார்.


இரண்டாவது மருத்துவர்: இல்லை.. "அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது .." என்றார்.


மூன்றாவது மருத்துவர்: அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .." என்றார்.


நான்காவது மருத்துவர்: அந்த "மனிதனால் முழங்காலை தூக்க முடியாது, அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது .." என்றார்.


ஐந்தாவது மருத்துவர்: "ஆனால் எனக்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது," என்றார்.


ஆறாவது மருத்துவர் அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு முன்பு...


அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது ஒரு கால் செருப்பு அறுந்து விட்டது, அதை சரி செய்யக்கூடிய செருப்பு தைப்பவர் யாராவது இங்கு அருகில் இருக்கிறாரா.?" என கேட்கிறார்.


*தற்போது எல்லா டிவி, சோசியல் மீடியாக்களில் வல்லுனர்கள் என,  அரசியலையும் நாட்டு நடப்புகளை பற்றியும் வந்து பேசுபவர்கள், இந்த டாக்டர் குழு மாதிரி தான் பேசுகிறார்கள்.*


அதையும் கேட்டு கொண்டு இருப்பது மக்களாகிய நமது விதி..


*சில  செய்திகளையும்.. தொலைக்காட்சி விவாதங்களையும்.. பார்க்காமல் தவிர்ப்பது..

 நமக்கு, குடும்பத்திற்கு, சமூகத்திற்கு மற்றும் நாட்டுக்கு நல்லது.*


No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...