Sunday, July 31, 2022

*சீனாவின் உளவுக் கப்பல், ரணில் முன் வந்திருக்கும் சவால்..!*

*சீனாவின் உளவுக் கப்பல், ரணில் முன் வந்திருக்கும் சவால்..!*
————————————
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது...
ராஜபக்சக்கள் கடந்த காலங்களில் இதை அனுமதித்தனர்

சீன இராணுவத்தின் 'யுவான் வாங்க் - 5' என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஆகஸ்ட்  11ல் வருகிறது. ஆகஸ்ட் , 17 வரை முகாமிடும் இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் இந்தியாவால்  சேகரிக்கப்படுவதுடன், அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் இராஜதந்திர மட்டத்தில் விவாதம் நடந்துள்ளது.

சீன கப்பலில் இருந்து, 750 கி.மீ., பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்

 நிலையங்கள், நாங்குநேரி INS கட்டபொம்மன்,  மகேந்திரகிரி heavy water,    அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியுமா? என்று இந்தியா
கவனிக்க வேண்டும் ..

அதுபோல, கேரளா தும்மபா  மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின்  தென் மாநிலங்களில் உள்ள ஆறு முக்கிய துறைமுகங்களையும் சீன கப்பல் உளவு பார்க்கலாமென்பதால் இந்திய இதில் தலையிட வேண்டும்

இலங்கை   நிதி நெருக்கடியில், வேறு எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், இந்திய அரசு பெரிய அளவில் கடன் வழங்கியும், பொருட்களை அனுப்பியும் உதவியுள்ளது.ஆனால் சீனாவின் கப்பலை தடுக்க இந்தியாவால் முடியும்..

சீனாவின் கப்பலை தடுத்து நிறுத்துவதா அல்லது அதற்கு அனுமதியளித்து இந்தியாவின் எதிர்ப்பினை சம்பாதிப்பதா என்பது ரணிலின் கைகளில் இருக்கிறது.

ரணிலுக்கு இனித்தான் சோதனை ஆரம்பம்..!

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...