Sunday, July 24, 2022

*Small note on Congress history* •••••• *துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: மம்தா பானர்ஜி நிலைப்பாடும், மார்கரெட் ஆல்வாவும்*. *சில காங்கிரஸ் வரலாற்று நிகழ்வுகள்*

*Small note on Congress history* •••••• *துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: மம்தா பானர்ஜி நிலைப்பாடும், மார்கரெட் ஆல்வாவும்*. *சில காங்கிரஸ் வரலாற்று நிகழ்வுகள்*

https://timesofindia.indiatimes.com/india/this-isnt-time-for-ego-or-anger-says-margaret-alva-on-tmcs-decision-to-skip-vice-presidential-polls/articleshow/93053098.cms.
••••••                 
 *Why?* 
*What happened previously…..?*
*Small note on Congress history* 
••••••
*துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: மம்தா பானர்ஜி நிலைப்பாடும், மார்கரெட் ஆல்வாவும்*. 
*சில காங்கிரஸ் வரலாற்று நிகழ்வுகள்*
————————————

மம்தா பானர்ஜிக்கும், மார்கரெட் ஆல்வாவுக்கும் எப்போதும் ஈகோ பிரச்சனை இருக்கும். மம்தா உட்பட நாங்களெல்லம் மாணவர் காங்கிரஸ் அரசியலில் இருந்தோம். மார்கரெட் ஆல்வாவுக்கு எங்களை விட சற்று வயது கூடயிருந்தாலும் அதே காலத்தில் தான் காங்கிரசில் முக்கியமாக இருந்தார். அவருடைய தாயார் வயலெட் ஆல்வாவும், தந்தையும் காங்கிரசில் இருந்தவர்கள்தான்.

நான் மாணவர் காங்கிரசில் இருந்தபொழுது மேற்குவங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்சன்தாஸ் முன்சியோடு நெருக்கமாக இருந்தவர் மார்கரெட் ஆல்வா. நானும் முன்சியோடு நல்ல தொடர்பில் இருந்தேன்.இது எல்லாம் 1970 கால கட்டங்களில் நிகழ்ந்தவை.

மேற்குவங்கத்தில் அன்றைக்கு காங்கிரஸில் பிரணாப் முகர்ஜி, கணிக்கான் சவுத்ரி, சித்தார்த்த சங்கர் ரே, பிரிய ரஞ்சன்தாஸ் முன்சி என நான்கு குழுக்களாக இருந்தார்கள்.

இதில், மம்தா பானர்ஜி மாணவர் காங்கிரஸ் இருந்து தனிப்போக்கில் இருப்பார். அன்றைக்கு மாணவர் காங்கிரசின் தலைமையில் இருந்தவர் சுல்தானா ரஸிதா. இவர் ஒரு நடிகை. சஞ்சய் காந்திக்கு வேண்டப்பட்டவர். இளைஞர் காங்கிரஸில் அன்றைக்கு அம்பிகா சோனி, சஞ்சய் காந்தி, ராமச்சந்திர ராத், குலாம் நபி ஆஸாத், ஆனந்த சர்மா போன்ற பலர் முக்கியமானவர்கள் பொறுப்பில் இருந்தார்கள்.

மாணவர் காங்கிரசும் இளைஞர் காங்கிரசும் முக்கிய பணிகளை அன்றைக்கு ஆற்றிக் கொண்டிருக்கும் போது மம்தா பானர்ஜியுடைய பெயர் பத்திரிகையில் செய்திகள் சிறப்பாக வந்தது. மேற்குவங்க பிரச்சனைகளை இந்திரா காந்தி காலத்தில் சில நேரங்கள் மார்கரெட் ஆல்வா, காங்கிரஸ் அலுவலகத்தில் விசாரித்ததுண்டு. அப்போது ஒரு ஈகோ மம்தாவுக்கும் மார்கரெட் ஆல்வாக்கும் ஏற்பட்டது என்று கேள்விப்பட்டதுண்டு.

இப்படியான நிலையில் என்ன நோக்கத்தில் மம்தா மார்கரெட் ஆல்வாவை ஆதரிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்துள்ளார் என்பது தெரியவில்லை. இது கடந்த கால செய்தி. அதேபோல் மார்கரெட் ஆல்வா பற்றியும் சொல்ல வேண்டும். இவர் மங்களூரைச் சேர்ந்தவர். ராஜ்யசபா உறுப்பினர். சில காலம் ராஜ்யசபாவை நடத்தக்கூடிய பொறுப்பும் இவருக்கு இருந்தது. ஈழத் தமிழருக்கு விரோதமானவர். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான தோழி. ஜெயலலிதா ராஜ்யசபா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது வாரம் ஒரு முறை இருவரும் பலமுறை டில்லி அசோகாவில் சந்தித்து உணவருந்தியதும் உண்டு. 

ராஜீவ் படுகொலை நடப்பதற்கு முன்பே ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் நடத்துவது பாதுகாப்பான இடமில்லை என்று ஜிகே மூப்பனாரும் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராம்மூர்த்தி கூறியபோது  அதையெல்லாம் மறுத்து கூட்டம் அங்கேயே நடக்கட்டும் என்று சொன்னவரும் அன்றைய  பொறுப்பில் இருந்த இதே மார்கரெட் ஆல்வாதான்.

இப்படிப் பல கடந்த கால தகவல்களைப் பகிர்வது அவசியமானது. கர்நாடக அரசியலில் ஆல்வா குடும்பத்தை சற்று ஒதுக்கியே வைத்திருந்தார்கள். அது தேவராஜ்  அர்ஸ் அரசியலிலும் நடந்தது. குண்டுராவ் அரசியலிலும் நடந்தது. ஆனால், டெல்லியில் இந்திரா காந்தியிடம் இவர்கள் குடும்பம் செல்வாக்கோடு  இருந்தது. 
ராஜ்யசபாவில் இவருடைய   குடும்பத்தினர் அதன்பின் இவரும் தொடர்ந்து இருந்ததெல்லாம் உண்டு.  இப்படியான பின்புலம் மார்கரெட் ஆல்வாவுக்கு உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அவருடைய தொடர்புகள் காங்கிரஸில் பெரிதாக இல்லை. ஜனதா ஆட்சி காலத்தில் காங்கிரஸில் பிளவு   ஏற்பட்டது. அப்போது மூப்பனார், சிஎஸ்.ஆர்வி,குடந்தை ராமலிங்கம், சிவாஜி கணேசன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திராவை ஆதரிக்கவில்லை.

1977 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முதலாக காங்கிரஸ் கட்சியையும் இந்திரா காந்தியையும் தோற்கடிக்கபட்டு ஜனதா கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.இந்திரா தலைமையில் ஒரு காங்கிரசும், பிரம்மானந்த ரெட்டி ஸ்வரன் சிங், ஏ.கே. அந்தோணி என பலரின் தலைமையில் ஒரு காங்கிரசும் என பிளவின்போது, எனக்கு சரியாக நினைவிருக்கிறது. 1978-டிசம்பரில் கடும் குளிர், டில்லியில் அப்பொழுது இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கூட்டம் கூடியது. நானும் கலந்து கொண்டேன். தமிழகத்தின் சார்பில் இந்திராவை ஆதரித்தவர் பழ.நெடுமாறன்அன்று கூட்டத்தில் அவர் சொன்னார் ராமர் இருக்கிற அயோத்தி, போல இந்திரா இருக்கிற இடம் காங்கிரஸ் என்று நெடுமாறன் பேசியபோது, அருகில் அமர்ந்திருந்த மார்கரெட் ஆல்வா சரியாக சொன்னீர்கள் என்று சொன்னதெல்லாம் நினைவில் இருக்கிறது.

அன்றைக்கு மூப்பனார் , சி.எஸ், ஆர். வெங்கட்டரமன், சிவாஜி கணேசன் என பலர் இந்திராவை ஆதரிக்கவும்வில்லை. எதிராகவும் இருந்தனர்.

அன்றைக்கு பழ நெடுமாறன் மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன், வாழப்பாடி ராமமூர்த்தி, எ.பி.சி.வீரபாகு, மகாதேவன் பிள்ளை, துளசியா வாண்டையார், கவிஞர் கண்ணதாசன், தஞ்சை இராம்மூர்த்தி, எம்.பி. சுப்பிரமணியம் போன்ற பலர் இந்திராவோடு இருந்து தமிழகத்தை சார்ந்த தலைவர்கள் ஆதரித்தனர்.

இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதை அடுத்து 1978ல் இரண்டாக பிளவுபட்டது. இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸவரன் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். சுவரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது, இது காங்கிரசு (எஸ் ) என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது.

இது கடந்த கால வரலாறு. இதை பிரணாப் முகர்ஜி தன்னுடைய வரலாற்று நூல் முதல் தொகுதியில் சொல்லியுள்ளார் என்பதும் கவனிக்க வேண்டும். மார்கரெட் ஆல்வாவுக்கும் மம்தாவுக்கும் காங்கிரஸ் அரசியல் மட்டுமல்ல அதைத் தாண்டியும் ஒரு சில நேரங்களில் ஈகோ பிரச்சனைகள் இருந்ததுண்டு என்ற நிலையை, நான் 1970களிலேயே அறிந்தவன் என்பதை சொல்வதற்கு தான் இந்தப் பதிவு.

இந்த நிலையில் நேற்று மம்தாவின்   நெருக்கமான மே. வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் கட்டு கட்டாக லஞ்ச பணம். 
தானும் நவீன் பட்நாயக் போல் முடிவகள் எடுத்தால் என்ன என  மம்தா நினைக்கிறார். அவருக்கும் சோனியா மற்றும் சரத் பாவாருக்கும்
ஒத்தும் போகாது.

மம்தா இந்த முடிவை எடுத்ததற்கு முதல் காரணம் மார்கரெட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்மொழிந்தவ்ர் சீதாராம் யெச்சூரி என்பது. 2 நிதீஷ்,ஜெகன், நவீன், சந்திரபாபு, போல மமதாவும்…

#காங்கிரஸ்
#இந்திராகாந்தி
#Congress
#IndiraGandhi
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#ksrpost
24-7-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...