நான்காவது பதிப்பு காணும் எனது ‘நிமிர வைக்கும் நெல்லை’ என்ற நூல் இரண்டு தொகுதிகளாக வர இருக்கிறது. இந்த நூலுக்கு 1995 முதல் தரவுகளைத் தேடி ஒருங்கிணைத்து வந்தேன். அப்போது நீதிபதி ரத்னவேல் பாண்டியான் அவர்கள் இந்தப் பணிகளை அவசியம் செய்ய வேண்டுமெ எனக் கூறினார்.
தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தென்மாவாட்டங்களில், குறிப்பாக ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிக் கலவரங்கள் நடப்பதால், அதைத் தீர்க்க, ஆய்வு செய்து அறிக்கை தர உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
தென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் வெடித்த காலக்கட்டத்தில், தென் மாவட்டங்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிகுறித்து ஆராய்ந்து விரிவான அறிக்கையை தர அமைக்கப்பட்ட குழுவுக்கும் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் கமிஷன்மே 16, 1998 ம் தேதியில் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியானது.
அப்போது, அந்தப் பணிக்கு ‘நிமிர வைக்கும் நெல்லை’நூலுக்காக நான் தேடிய தரவுகளைப் பெற்றுக் கொண்டார். தெற்குச் சீமையில் சமூக, பொருளாதார விவரங்கள் குறித்தும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அந்த அறிக்கையில் நான் கொடுத்ததுதான் கங்கை கொண்டான், நாங்குநேரி தொழில் பூங்கா திட்டம். சேது கால்வாய், மணப்பாடு போன்ற மீன் பிடி துறைமுக திட்டங்கள், கழுகுமலை, ஆதிதச்சநல்லூர்,கிருஷ்னபுரம் போன்ற பல இடங்களில் சுற்றுலா வளர்ச்சி, தீப்பெட்டி- பட்டாசு தொழில் என பல பிரச்சனைகள் அச்சன் கோவில்-பம்பை- வைப்பாறு இணைப்பு, அழகர் அணை என நீர்பாசன திட்டங்கள், பருத்தி, மிளகு வற்றலுக்கு கட்டுபடியான விலை வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி, விளாத்திக்குளம், சங்கரன் கோவில், ஒட்டப்பிடாரம் பகுதிகளில் உள்ள தேவைகளை கோரிக்கைகளாக எழுதிக் கொடுத்தேன்.
அப்போது அதில் , பல பரிந்துரைகளை ரத்னவேல் பாண்டியன் குழு கலைஞர் ஆட்சியிக்கு வழங்கியது.
. நான்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா , கங்கை கொண்டான் ,மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்ளை நிறுவியது கலைஞரின்திமுக அரசு. காழ்ப்புணர்ச்சியில் இந்த திட்டத்தை முடக்கியது ஜெயலலிதாவின்அதிமுக அரசு
No comments:
Post a Comment