—————————————
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை எடுக்காத கம்யூனிஸ்ட் அணி நாடுகள் சீனாவும், ரஷ்யாவும் இப்போது கூட்டுச் சேர்ந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஒரு பக்கம் இந்துமாக்கடல் பகுதியில் டிக்கோகார்சியா தீவில் அமெரிக்கா கடற்படைத் தளம் ...
இந்து மகாசமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஒருபக்கத்தில் சீசல்ஸின் டீகோ கார்சிர்யா தீவுப் பகுதியில் பிரிட்டன் மூலமாகக் குத்தகைக்கு எடுத்து அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க இருக்கிறது. பிரான்ஸும் ரஷ்யாவும் இந்தக் கடலில் தனது ஆதிக்கக்தை செலுத்தத் திட்டங்களை தீட்டிட்யுள்ளன. இந்தியப் பெருங்கடலில் நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் அமெரிக்காவும் சீனாவும் தனது போர்க் கப்பல்களை எல்லாம் அங்கு நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், கடற்படைப் பயிற்சிகளும் நடப்பதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்கா-சீனா போட்டி, சிக்கல் என பிரச்சனைகள் ஏற்படலாம்.
தற்போது ரஷ்யா மற்றும் சீனா தென்னாபிரிக்காவின் கூட்டு இராணுவப் பயிற்சியை 17.02.2023- இல் தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கெனவே இலங்கையின் ஆழ்கடலில் சீன வலுவான நிலையை அடைந்துள்ளது
ஆப்பிரிக்கா பகுதியில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்காகவே இத்தகைய கூட்டு ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
சீனாவின் நோக்கம், இந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி, அதன் கடற்படையைச் சர்வதேசக் கடற்பரப்பிற்குள் மிகப் பெரிய அளவில் பரவச் செய்வதாகும்.
சீனா ஏற்கனவே கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரையில் உள்ள ஜிபூட்டியை கடற்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடும் காரணத்தைக் காட்டி கடற்படைத்தளமாகப் பயன்படுத்துகிறது.
இந்தநிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான சீனாவின் கூட்டு இராணுவப் பயிற்சி சீனாவின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதாகவே அமையும்.
இந்திய – சீன எல்லைப் பிரச்னையில் சிக்கல்கள் நீடிக்கும்நிலையில், இலங்கை அரசுடன் நட்புறவுடன் இருக்கும் சீனா, இந்திய கடல்பகுதிகளில் மேற்கொள்ளும் ராணுவ ஆதிக்கங்கள் எந்த அளவுக்கு இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கூறத் தேவையில்லை.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது என்பதே உண்மை.
இலங்கைத் தமிழர்களை ஆதரித்ததுண்டா?
கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஐநா சபையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எப்போதாவது வாக்களித்ததுண்டா?
தேசிய இனப் பிரச்னை குறித்து லெனின் கூறியுள்ளதை எப்போதாவது அவர்கள் கவனத்தில் கொண்டார்களா?
‘இல்லை’ என்பதே இவற்றுக்கான பதில்.
தேசிய சுயநிர்ணய உரிமை குறித்து லெனின், “தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதற்கு அரசியல் சுயநிர்ணயம், அரசின் சுயேச்சைத்தன்மை, ஒரு தேசிய அரசு அமைத்தல் என்கிற பொருள்தான் உண்டு. வேறு பொருள் இருக்க முடியாது ” என்று கூறுகிறார். இதை இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்த கம்யூனிஸ்ட் அணி நாடுகள் பொருத்திப் பார்த்திருப்பதாக தெரியவில்லை.
KSR VOICE
#ksr #ksrvoice #KSRadhakrishnan
#ksrvoice, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்இராதாகிருஷ்ணன், #geopoltics #politics,
#KSR_Post
21-2-2023.
No comments:
Post a Comment