#கிரா நூற்றாண்டு நிறைவு விழா
—————————————
கிரா நூற்றாண்டு நிறைவு விழா வரும் மார்ச் 13 ஆம் தேதி திங்கள் கிழமை நடக்கின்றது. இன்றைக்குப் பலர் கிராவுக்கு விழா எடுப்பது மகிழ்ச்சிதான். கிரா மணி விழா மதுரையில் (காலேஜ் அவுஸ்)கவிஞர் மீராவுடன் இணைந்து, சென்னையில் கிரா 70, 75, 80,பின் 90 டில்லியில் என் முன் எடுப்பில் தினமணி- டில்லி தமிழ் சங்கம் இணைந்தும், 95 புதுவையில் எடுத்தேன் என்பது பலர்(?) மறந்து விடுவார்கள்.
இறுதியாக வரும் மார்ச் 13,இந்த விழாவையும் சிறப்பாக நடக்கவிருக்கின்றது. கிரா 100 என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக கிராவைப் பற்றி தமிழகம் போற்றும் அறிஞர்கள், அவருடைய நண்பர்கள் எழுதி அனுப்பி வைத்த 500 கட்டுரைகளை ஆய்வு செய்து அவற்றில் 160 கட்டுரைகள் வரை என்று இறுதிப்படுத்தப்பட்டு; பல்வேறு நண்பர்களின் ஒத்துழைப்பால் இந்தப் பணிகளைச் செய்ய முடிந்தது. பலர் இன்னும் அந்த தொகுப்பு நூல் வெளியாகவில்லையா என்று கேட்டார்கள்.
இந்தப் பணிகளுக்காக நான் எடுத்துக் கொண்ட காலமும் நேரமும் அதிகம். தனியொரு மனிதனாக பல்வேறு எனது பணிகளுக்கு இடையில் இந்த அரிய பணியைச் செய்ய வேண்டி இருந்தது.
இதற்கான கட்டுரைகள் 2022 ஆகஸ்ட் வரை வந்ததும் உண்டு. அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி, பிழை பார்த்து, சரி செய்து கொண்டு வருவதில் தனிமனிதனாக எனக்கேற்பட்ட சிரமங்கள் சற்று அதிகமே.
இந்த விழாவில் முக்கிய அகில இந்திய புள்ளிகள் கலந்து கொள்கின்றனர். கிராவின் புகழ் பாடக் கூடிய அளவில், கிராவின் புகழை இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லக் கூடிய வகையில், சில திட்டங்களை வகுத்து இந்த விழாவில் அறிவிக்க உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழா சென்னை அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் (சத்யா ஸ்டுடியோ ) நடக்க உள்ளது. பங்கேற்பவர்களுடைய பெயர்களோடு அழைப்பிதழ் வலைதளங்களிலும் பகிரப்படும்.
அனைவரும் வருக.
#கிரா #கி_ராஜநாரயணன்
#kira
#ksr #KSRadhakrishnan
#ksrvoice, #கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment