Tuesday, April 14, 2020

கரோனா

வாழ்வை நிதானித்து பார்க்கவும் வாழ்ந்து கொண்டிருப்பது சரியான வாழ்க்கை தானா என சீர்தூக்கி பார்க்கவும் காலம் மிக அரிதாகவே வாய்ப்பை வழங்குகிறது.நமது அடிப்படை தேவை என பார்த்தால் உணவும் ஒண்டுதலுமே. இந்த நாட்களில் இவை தான் முதன்மையாக இருப்பதை உணர்கிறோம்.காதல் கலவி எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

உனவற்ற ,வீடற்ற மனிதர்களின் நிலை ?தினக்கூலியில் வயிறு வளர்க்கும் மனிதர்களின் நிலை என்ன ? சவாரிக்காக நாள் முழுக்க காத்திருந்து வாழ்வை நடத்தும் மனிதனின் மனம் ஒரு மாதமாக ஆட்டோ ஒட்டாமல் இருக்கும் போது என்ன சிந்திக்கும் ? ஒட்டுண்ணி  நோயின் தீவிரம் தாளாது  வீட்டினரையே விலக்கி வைத்தியம் செய்யும் அந்த செவிலியரின் மனம் என்ன சிந்திக்கும் ? தினசரி செருப்பு தைத்து பிழைப்பு நடத்துபுவர் என்னாவார்? கோயில் வாசல்களின் பூ விற்பவர்கள் இந்த ஒரு மாத பூக்கள் ? இரவு பயணத்தில் கண்விழித்து பேருந்தை இயக்கிப்பழகி பகல் முழுதும் தூக்கத்தில் கழிக்கும் மனிதர்களின் வாழ்வு முறை என்ன மாறுதலை சந்திக்கும் ? தங்க ஆளில்லாவிட்டாலும் தங்கும்விடுதிகளில் பணி புரியும் பணியாளர்கள் வேலைக்கு செல்வார்களா ? மாட்டார்களா ? அவர்களுக்கு சம்பளம் உண்டா ?  உணவு விடுதிகளில் மேசை துடைப்பவர்கள்,பரிமாறுபவர்கள் ,உணவு செய்வோர் என எல்லோரும் இப்போது எப்படி இருப்பர் ? சுங்கச்சாலையில் ஏய்த்து பிடுங்குவோர் இன்னும் அங்கு அமர்ந்திருப்பாரா ? ஆளரவமற்ற சாலைகள் அவர்களுக்கு எதை நினைக்க வைக்கும் ? இன்னும் இன்னும் என கிளைத்துக்கொண்டே இருக்கின்றன கேள்விகள் .. 

வல்லரசு என்ற வார்த்தை சுக்கல் சுக்கலாக நொறுங்கி கண்முன்னே கிடக்கிறது.தொழில் நுட்பம்,வானுயர்ந்த கட்டிடங்கள், கண்ணசைவில் பணிபுரியும் இயந்திரங்கள் , என எண்ணற்றவை ஒற்றை உயிரை காக்க வக்கற்று கிடக்கின்றன.  நாகரீகத்தில் ,தொழில் நுட்பத்தில் உச்சம் அடைந்தவர்கள் மேன்மையானவர்கள் என்ற மாயை குப்பையில் கிடக்கிறது.சொந்த நாட்டுக்கு செல்ல அந்த நாட்டுக்காரனே மறுக்கும் அவலம் நடக்கிறது.

.க்ரீன்கார்டு.... இந்த அமெரிக்காவுக்கு போக தவம் இருந்தவன எல்லாம் இப்ப ஏத்தி அங்க கொண்டு விட்டுடணும்..
பெரு நகரங்கள் பெயரிடப்படாத சிறைச்சாலைகள் போலாகிவிட்டன.

ஒரு பக்கம் யோசிக்கும் போது என்ன ஆட்டம் ஆடினீங்கடா என தோன்றுகிறது. பஸ்லேர்ந்து அடுத்தவன் மேல எச்ச துப்பறது ,இருக்கற இடம் முழுக்க கண்ட கருமத்த தின்னு துப்பி வைக்க்றது.பைக்ல போறப்பவும் பின்னாடி யாராவது வராங்களான்னு பாக்காம காத்துல துப்பின கருமாந்தரம் எல்லாம் அவன் வாயே அவனே கட்டிட்டு அலையும் போது பாக்கறப்ப வர்ற சந்தோஷம் இருக்கே.டேய் எப்ப்டிலாம் துப்பினீங்க.பஸ்சுல போனா துப்புவாங்க,பைக்ல போனாலும், துப்புவாங்க , கார்ல போனாலும் கண்ணாடிய இறக்கி விட்டு துப்புவாங்க ,எல்லா இடத்தில் துப்புவாங்க ,எந்த கட்டிடத்து மூலை கிடைச்சாலும் துப்புவாங்க ? இன்னிக்கு கொர்னு ஒரு இழு இழு பாக்கலாம் .

லைசென்ஸ் எடுத்து ஒழுங்கா வண்டி ஒட்டிட்டு இருந்தப்பவே போலீஸ் நிறுத்தி அத்தன தடவை  துருவி விசாரிச்சு அனுப்புவாங்க.இன்னிக்கு என்னடான்னா ? எல்லா பைக்லயும் மூணு பேருக்கு குறைஞ்சு போறதே கிடையாது ? ரொம்ப அபூர்வமா பசங்கள புடிச்சாலும் புடிப்பாங்க பொண்ணுங்கன்னா பாசம் பொங்க அனுப்பிடுவாங்க.

அன்னைக்கு டிவில பார்த்தேன்.எந்த ஊரு போலீஸம்மவோ தெரியல.ஜீன்ஸ் போட்டுட்டு ,கூலிங்கிளாஸ் போட்டு ஒரு பொண்ணு கெத்தா ஸ்கூட்டில வந்த்துது .கேட்டதுக்கு ஏதோ இங்கிலிபீசுல பதில்.அந்த அம்மா லத்திய எடுத்து ரெண்டு சாத்த போட்டு தோப்புக்கரணம் போட வைச்சிருச்சு.எவ்வளவு நாள் ஆசை.அப்பாடா . . 
காசுதான் வாழ்க்கைன்னு ஓடினவன் எல்லாம் காசிருக்கு இந்த ஸ்டொர்ல இல்ல .அந்த ஸ்டோர்ல துவரம் பருப்பு இருக்கா பிரதர்னு ஓடிட்டு இருக்கான்.

எந்த ஊர்லயும் சம்பாதிக்கலாம்.சொந்த ஊர்ல தான் வாழமுடியும்னு நடந்து வந்தவங்கள நீங்களே தான் பாத்திருப்பீங்களே.இன்னும் வெள்ளை காலர் ஆளுங்கள்ளாம் இருக்கான்.சம்பாதிச்சு வச்சுகிட்டு அவன யாரு நடக்க சொன்னா ? இவன் ஏன் வெளில போறான் ? ன்னு பிரிட்ஜ்ல மாசத்துக்கு சேர்த்து வச்சுட்டு திங்கற கொழுப்பு ? ஒரு வாரம் மின்சாரம் இல்லாமவும் போயிடனும் . பொழப்பு நாறிடும்..

விஞ்ஞானம் நவீனம்னு என்ன ஜல்லி வேணா அடிக்கலாம்.ஒழுக்கமா பூமியை கெடுக்காம இல்லீன்னா ? ஒரே ஒரு குலுக்கு எல்லா தளுக்கு மினுக்கும் மண்ணுக்குள்ள ? எல்லா இம்சையையும் புதைச்சிட்டு மறுஉருவாக்கம் தான்.

இதோட முடிஞ்சு போகும்ங்கறதுக்கு எந்த உத்தரவாதமும் இல்ல. இது சும்மா ட்ரெய்லர் தாம்மா .. மெய்ன் பிக்சர இன்னும் பாக்கலியே என்பதாக கூட இருக்கலாம்.
நாம் நமது வாழ்வு முறையை பரிசீலிப்போம்.மனித நேயம் கொண்டவர்களாக ,இயற்கைக்கு நெருக்கமானவர்களாக மாறுவோம்.

#கரோனா 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...