Friday, April 24, 2020

#தேர்தல்_சீர்திருத்தங்கள்

#தேர்தல்_சீர்திருத்தங்கள்
======================



ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லவர்கள், வல்லவர்கள் இருத்தல் வேண்டும். அப்போதுதான் நல்லாட்சி அமையும். அரசியலுக்கு அச்சாணி தேர்தல். தற்போதைய தேர்தலில் பணபலமும், குண்டர் பலமும் முக்கியமான அங்கங்களாக இருக்கின்றன. இவை ஒழிய வேண்டும். உச்சநீதிமன்றத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்றும், 1998ல் இந்திரஜித் குப்தா தலைமையில் அமைந்த குழு பரிந்துரைத்த வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்கவேண்டும் போன்ற சீர்திருத்தங்களை செயல்படுத்த வழக்கு தொடுத்துள்ளேன். இந்த வழக்கு ஆவணங்களை படித்துக்கொண்டிருக்கும்போது இதுவரை இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தத்திற்காக பல குழுக்கள் அமைத்துள்ளன. 

அவை 

1. கூட்டு நாடாமன்ற குழுவில் தேர்தல் சீர்திருத்த அறிக்கை - 1971 (இது ஜெகநாத ராவ் தலைமையில் இயங்கியது). இந்த அறிக்கை 18.1.72ல் வழங்கப்பட்டது. 
2. தார்குண்டே கமிட்டி 
3. தினேஷ் கோஸ்சாமி கமிட்டி - 1990
4. ஓரா கமிட்டி - 1993
5. இந்திரஜித் குப்தா கமிட்டி - 1998
6. லா கமிஷன் அளித்த தேர்தல் சீர்திருத்த சட்டங்கள் குறித்த அறிக்கை - 1999
7. அரசியலமைப்புச் சட்ட திருத்த தேசியக் குழு - 2000
8. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சீர்திருத்தம் குறித்த அறிக்கை - 2004
9. இரண்டாவது நிர்வாக சீர்திருத்த அறிக்கை - 2008
மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகள்

என பரிந்துரைகளும், அறிக்கைகளும்தான் உள்ளன. செயல்பாடுகள் இல்லை. இன்றைக்கு Election fo Sale என்றே வெளிப்படையாக தயக்கமில்லாமல் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். Vote Buying, Policy, Electoral Market, Public or Private Goods Selections? Vote buying trust-worthy brokers, Budget for Vote buying என்ற வார்த்தைப் பதங்களை ஒரு தத்துவம் மாதிரி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். Frederic Charles Schaffer தொகுத்த Elections for Sale என்ற நூலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை முறைப்படுத்தி எழுதியதையெல்லாம் பார்க்கும்பொழுது மிகவும் அபத்தமாகவும் கவலையாகவும் இருந்தது. இப்படி நிலைமைகள் நீடித்தால் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்டிப் படிப்பதைப் போன்று, எம்.எல்.ஏ., எம்.பி. பதவியையும் பணம் கட்டி எந்தவித தியாகமும் இல்லாமல் பிடித்துவிடலாம்.  அரசியல் வியாபாரம், தொழில் என்ற நிலைக்கு வந்துவிடும். 

ஒரு கட்டத்தில் நல்லவர்கள், நேர்மையாளர்கள் அரசியலில் களம் இல்லை என்ற நிலை சிறுக சிறுக வந்துகொண்டிருக்கும். இந்த கேடுகெட்ட பரிணாமம் எதில் போய் முடியுமோ?

#தேர்தல்சீர்திருத்தங்கள் #electionsforsale
#electoralreforms 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.04.2020
#ksrposting 
#ksradhakrishnanposting

1 comment:

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...