Sunday, April 26, 2020

#நானும்_அரசியல்_செய்யணும்ல”

“#நானும்_அரசியல்_செய்யணும்ல”
————————————————
இன்று காலை  தென் மாவட்டத்தைச் சார்ந்த நண்பர்,அரசியலில் இருக்கும் புள்ளி  ஒருவர்  நீதிமன்ற  வழக்கு குறித்தான உதவிக் கேட்டு பேசினார். 

எண்பதுகளில்  இருந்து ஏதோ  ஒரு வகையில் தேர்தலில் வெற்றிப் பெறுவார். இன்றைக்கு  அவர்  பேசிக்கொண்டிருக்கும் போது “நானும் அரசியல் செய்யணும்ல” என்றார். நான் குறுக்கிட்டு, “வியாபாரம் செய்வாங்க, ஓட்டல்  நடத்துவாங்க,   சினிமா தியேட்டரை நடத்துவாங்க, ‘இதென்ன நானும் அரசியல் செய்யணும்ல’ சொல்றீங்களே, புரியலயே,’’ அரசியல தத்துவம் எப்படி வந்தது தெரியுமா?” என்று கேட்டேன். “அண்ணாச்சி அதெல்லாம் எனக்கெதுக்கு? ஏதோ தேர்தல்ல போட்டியிட்டோமா ஜெயிச்சோமா, பதவிய வாங்குனோமா, இருந்தோமான்னு இருக்கணும்”. சரிதானே” கமிஷன் கடை  வியாபாரி மாதிரி பேசினார்.இவருக்கு மக்கள் நல அரசியல் தெரியவில்லை.  தன்  நல அரசியல் இவருக்கு பிடி படுகிறது.




அவரை பற்றி நன்றாகத் தெரியும், நயா பைசாவுக்கு கூட கணக்கு பார்த்து கறாராக  இருப்பவர் அவர். வெறுங்கையில் வெள்ளைக் காக்கையை ஓட்டுவார். இப்படி அவர் பேசியதைப் பார்த்து என்ன சொல்ல முடியும்..
அவ்வளவுதான். 

#அரசியலில்_அரசியல்......

#அரசியல்_இல்லாத_அரசியல் .....

#அரசியலே_வேண்டாம்_என்பதிலும் #அரசியலே......

என்று சூட்சமமாக in between the lines அறியக் கூடிய விஞ்ஞான அரசியலைப் படித்துள்ளோம். 

‘அரசியல் செய்யணும்ல’ என்பதை இதுவரை கேள்விப்படவில்லை. இந்த பதத்தை உருவாக்கிய இந்த ‘அரசியல் நிபுணரைப் பார்த்தால் ப்ளாட்டோவோ, பிதாகரசோ, டைசியோ, வேர் போன்ற அரசியல் பண்டிதர்கள் நடையைக் கட்டி விடுவார்கள். எல்லாம் சுய ஆதாயம், இருத்தல் நிமித்தம், ஊடக வெளிச்சம்தான்.
இங்குதான் #தகுதியே_தடை அல்லவா

கே. எஸ். இராதாகிருஷணன்
26.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...