Tuesday, April 21, 2020

பிரிட்டிஷ்_கிழக்கிந்திய_கம்பெனி #East_india_company

#பிரிட்டிஷ்_கிழக்கிந்திய_கம்பெனி 
———————————————-
பிரிட்டிஷார் 17ஆம் நூற்றாண்டில் வந்த போது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தியாவுக்கு வரவில்லை. அந்த காலத்தில் எந்த ஐரோப்பிய  நாடும்  இந்தியாவைக் காட்டிலும்  தொழில்  வளர்ச்சியில் முன்னேறி வைக்கவில்லை மாறாக பின்தங்கி இருந்தது.

அந்த காலத்தில் இந்தியாவில் உற்பத்தியான டாக்கா - மஸ்லின், சூரத் பட்டு மற்றும் குறுமிளகு, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கி ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு சில ஐரோப்பிய கூட்டங்கள் இந்தியாவிற்கு வந்தனர். 

அதேபோன்றுஇந்தோனேசியத் தீவுகள், சீனா, வியட்னாம் போன்ற கிழக்கிந்திய நாடுகளுக்கும் இந்த ஐரோப்பிய வியாபாரக் கூட்டம் சென்றது. இவர்கள் அந்தந்த நாட்டின் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரால் அந்த நாடுகள் இடையே நடக்கும் வியாபாரத்தில் ஏகபோகத்தை வகித்தனர். அந்த கம்பெனிகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஹாலந்து போன்ற நாடுகளிலிருந்து அரசுகள் இந்த வியாபாரத்தை நடத்தும் ஏகபோக உரிமையை வழங்கின. இந்த கம்பெனிகளுக்கு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, போர்ச்சுகீஸ் கிழக்கிந்திய கம்பெனி, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்று பெயர்களாகும்.  இந்த கம்பெனிகள் தங்கள் வியாபாரத்தை நடத்துவதற்கு அன்றைக்கு இந்தியாவில் ஆட்சி நடத்திய மொகலாய அரசர்கள் அல்லது அந்த பிரதேசத்தில் ஆட்சி நடத்திய குறுநில மன்னர்கள் ஆகியோரிடமிருந்து அனுமதி பெற்றனர். அவர்கள் வாங்கும் சரக்குகளை பாதுகாப்பில் வைத்துக்கொள்வதற்காக சிறுசிறு கோட்டைகளை கட்டிக்கொள்ளவும் அவற்றில்  சிறு சிறு ஆயுதம் தாங்கிய படைகளை வைத்துக்கொள்ளவும் அனுமதியும் பெற்றுக் கொண்டனர்.













பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மொகலாய அரசர்கள் யாரிடம் 1603 அனுமதி பெற்று கல்கத்தாவில் வில்லியம் கோட்டை என்ற ஒரு கோட்டை கட்டிக் கொண்டது சென்னையில் அந்த பகுதியில் தெலுங்கு குறுநில மன்னராக இருந்த சென்னப்ப நாயக்கர்அனுமதி பெற்று “செயின்ட் ஜார்ஜ் கோட்டை” என்ற கோட்டையை கட்டிக்கொண்டது.

இதேபோன்று புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனம், சந்திரநாகூர் ஆகிய இடங்களில் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கோட்டைகளை கட்டிக்கொண்டது. போர்ச்சுகீசிய கம்பெனியானது, கேரளத்திலிருந்த கள்ளிக்கோட்டை அரசர் ஜாமொரினிடமிருந்து அனுமதி பெற்று கோழிக்கோட்டிலும், கோவா, டையூ, டாமன், பம்பாய் ஆகிய இடங்களிலும் கோட்டைகளை கட்டிக்கொண்டது. (பிறகு திருமணத்தின் காரணமாக ஏற்பட்ட உறவின் அடிப்படையில் போர்த்துகீசியம் இருந்து பம்பாய் பிரிட்டிஷ் அரசுக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்டது.)

டச்சு கம்பெனி தரங்கம்பாடியில் ஒரு கோட்டையை கட்டிக்கொண்டது. அவுரங்கசீப் காலத்தில் மொகலாய சாம்ராஜ்யம் நொறுங்கத் தொடங்கியது. அவருக்குப் பிறகு அது பல்வேறு நவாபுகளின் ஆட்சிகளாக சிதறுண்டது. அவர் காலத்திலேயே மகாராஷ்டிரத்தில் சிவாஜி கலகக் கொடியை உயர்த்தி மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். அதுவும் பிற்காலத்தில் சிதறுண்டது. இந்த காலத்தில் இருந்த பல்வேறு நவாபுகளும், குறுநில மன்னர்களும் ஒருவருக்கொருவர் போர் தொடுத்தனர். போரில் வெற்றி பெறுவதற்காக ஐரோப்பிய கம்பெனிகளின் உதவியை நாடினர். அந்த கம்பெனிகளுடைய படைகள் ஆயுதங்கள் முதலிய உதவியை நாடினர் இந்த கம்பெனி மேலும் இந்த போட்டியை இந்தியாவில் தங்களுடைய செல்வாக்கு  ஓங்குவதற்காக பயன்படுத்தினர். ஆனால்  இந்த போட்டியில் வெற்றி பெற்றது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி.

அது இந்திய நவாபுக்கும் மன்னர்களுக்கும் அளித்த உதவிக்குக் கைமாறாக சில பிரதேசங்களில் மக்களிடம் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது. மெல்ல மெல்ல பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் பெரும் பகுதியில் அரசியல் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப்பணத்தை இந்த நாட்டில் இந்த நீர்ப்பாசன வசதிகள் போன்றவற்றை பராமரிப்பதற்கு கூட பயன்படுத்தவில்லை. மாறாக அந்த வரிப்பணத்தை கொண்டே இந்த நாட்டில் இருந்து பொருட்களை வாங்கி ஐரோப்பிய சந்தைகளில் பெற்றது. சுருங்கச் சொன்னால் இந்த நாட்டை பகிரங்கமாக கொள்ளையடித்தது.

மத அடிப்படையில் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் தோல்வியடைந்த பிரிட்டிஷ் சர்க்கார் நிலப்பிரபுக்களை, சுதேச மன்னர்களைத் தங்களுக்கு ஆதரவாக கொண்டது.

பிரிட்டிஷ்_கிழக்கிந்திய_கம்பெனி 
#East_india_company

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
21.04.2020
#ksrposts
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...