Thursday, April 23, 2020

#திமுக #காங்கிரஸ் #கம்யூனிஸ்ட் #கட்சிகளின்_தெருவுக்குத்_தெரு #படிப்பகங்கள்..

#திமுக #காங்கிரஸ் #கம்யூனிஸ்ட் #கட்சிகளின்_தெருவுக்குத்_தெரு #படிப்பகங்கள்.....
———————————————-
40 ஆண்டுகளுக்கு முன் பிரதானமாக களத்தில் இருந்தன. அவை தமிழகம் முழுவதும் படிப்பகங்களை தெருவுக்குத் தெரு அமைத்தன. 

இதைக் குறித்து கவிஞர் விக்கிரமாதித்யன் “எலிசபெத் ராணி” என்ற சிறுகதையில் உள்ளது. (திரிபு சிறுகதை தொகுப்பு).

‘’தெருவுக்கு நாலு தி.மு.க மன்றங்கள்; நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி மன்றம், புரட்சி நடகர் எம். ஜி. ஆர். ரசிகர் மன்றம், இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் ரசிகர் மன்றம், அண்ணா படிப்பகம், சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு மன்றம் எப்படி.  பூர்ணம் வாராவாரம் வரும் திராவிட நாடு, இனமுழக்கம், மாலைமணி, மன்றம், தென்றல், முரசொலி, தனியரசு, நம்நாடு எல்லாம் படித்து முடித்துவிட்டுத்தான் கிளம்பிப் போவான். முதலாளி சாப்பிட மூணு மணியகிவிடும். தினம் அந்த மதிய நேரம் பிரச்சனையாகும். ஏண்டா இவ்வளவு நேரம் என்று திட்டுவார். கேட் அடைத்து விட்டது. அக்கா நான் போனபிறகுதான் எடுத்து வச்சாங்க. வீட்டுக்கு போயிட்டு வந்தேன். ஏதாவது சொல்வான். மத்தியானம் ஒழுங்காகப் போய்விட்டு வந்துவிட்டால், சாயங்காலம் பக்கோடா வாங்கப் போகையில் படிக்காமல் திரும்பிவர மாட்டான். இதோடு வாஞ்சிநாதன் வாசகநாலை, திருப்பூர் குமரன் படிப்பகம் போய்,நவசக்தி, செய்தி,நாத்திகம், சிகப்பு நாடா, பாரதம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனசக்தி, தாமரை, தீக்கதிர்,செம்மலர் எல்லாம் படிப்பான். பூர்ணனின் கல்வியறிவே இதுதான்.’’




கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...