Saturday, April 11, 2020

கரானா * *ஐநாபாதுகாப்பு_கவுன்சில் கூட்டம்*

*கரானா *
*ஐநாபாதுகாப்பு_கவுன்சில் கூட்டம்*
————————————
கரானா குறித்து நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதிக்க  நேற்று கூடியது. 15 உறுப்பு நாடுகள் கலந்துக் கொண்டன. 75 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச துயரத்தை சந்திக்கின்றோம் என்றும் 16 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 96 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ கட்டாரஸ் குறிப்பிட்டார். இந்த பாதிப்பு உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது, ஐநா பாதுகாப்பு கவுன்சில் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உலகளவில் எழுந்துள்ளது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டார். இதனால் சர்வதேச அமைதியின்மையும் வன்முறையும் கூட எழலாம். கவனமாக அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உலகப் பொருளாதார நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளாகும் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவும் சீனாவும் விவாதங்கள் வைக்காமல் தீர்வைக் காண வேண்டுமென்ற கருத்தும் சொல்லப்பட்டது. மேலும் இந்தியா அடுத்த ஆண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் போது கரானா பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று ஐநா சர்வதேச பிரச்சினை தடுப்புப் பிரிவின் இயக்குனர் ரிச்சர்ட் கோவன் கருத்து தெரிவித்திருந்தார்.


 கரானாவைக் கட்டுப்படுத்த, துல்லியமான, அறிவியல் சார்ந்த தகவல் தொகுப்பு தேவை. மேலும், வைரஸ் எங்கு, எப்போது தோன்றியது என்பது தொடரான ஆய்வு தகவல்களையும், நோய் பரவல் குறித்த புள்ளி விபரங்களையும், சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதன் மூலம், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, கரானா பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என
கெல்லி கிராப்ட்(ஐநாவுக்கான அமெரிக்க தூதர்) பேசினார்.




கே. எஸ். இராதாகிருஷ்ணன்
11.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...