Saturday, April 18, 2020

#டி. என்.கோபாலன்

#டி_என்_கோபாலன் 
——————————-
மூத்த பத்திரிக்கையாளர் Gopalan TN மதுரை,டி. என். கோபாலனுடைய (சொந்த மாவட்டம் தஞ்சை)எனது நட்பு எட்டவும் இல்லாமல் கிட்டயும் இல்லாமல் எண்பதுகளில் இருந்து தொடர்கிறது. 

எது சரியோ எது நியாயமோ அதை நேர்படச் சொல்லிவிட்டு சென்றுவிடுவார். மதுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் பணியாற்றிய காலத்திலிருந்து இன்று வரை வெள்ளை ஜிப்பாவும் நாலு முழ வேஷ்டியும் தான். 1980களில் ஈழப் பிரச்சினை சிக்கலில் இருந்த போது அதை பத்திரிக்கை மூலமாக மக்களுக்கு சரியாக கொண்டு சென்றவர் டிஎன்ஜி. 
கொடைக்கானலில் அடைத்துவைத்து, சுதந்திரம் இல்லாமல், கூலியும் சரியாக கிடைக்காமல் வாடிய கூலிகளை விடுதலை செய்ததெல்லாம் இவருடைய பெரிய சாதனை. 

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நக்சலைட் தொடர்புடைய மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் தர்மபுரி மாவட்டத்தில் பெருகி அப்போது பெரிய பிரச்சினையாக இருந்தது.  அன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த நெடுமாறனும் நாங்கள் எல்லாம் தர்மபுரி மாவட்டத்தில் 7 நாள் கிராமம் கிராமமாக பயணம் செய்து இதற்கு என்ன காரணம் என அறிந்து  அதன்  அறிக்கையை டெல்லியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடமும், குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் அவர்களிடமும் அறிக்கையாக கொடுத்தோம். தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களிடமும் இந்த அறிக்கையை அளித்து சமூக பொருளாதார சிக்கல்கள் தான் காரணம், அதற்கான நடவடிக்கையை எடுங்கள் என்று எடுத்துச் சொன்னோம்.




அன்றைக்கு எதிர்கட்சி தலைவராக இருந்த  கலைஞர் அவர்கள் நெடுமாறனிடத்தில் தொலைபேசியில் பேசியதெல்லாம் நினைவில் உண்டு. இந்த சிக்கலை எப்படி களைவது என்று தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரசில் டிஎன்ஜி எழுதினார். 

மனித உரிமை பிரச்சினைகள் எங்கு நடந்தாலும் அது இவர் மூலமாக பத்திரிக்கையில் செய்தியாக வந்து விடும். அனைத்துக் கட்சியினரிடமும் நட்பாக இருப்பார். தவறு என்றால் கறாராக சொல்லி விடுவார். மனித நேயமிக்கவர். என் மீது எப்போதும் அன்பு கொண்டவர். 


இவர் தஞ்சாவுர் தான் .பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர் .அப்போதே பல quiz போட்டியில் பல மரிசுகளை வென்றவர் .செனீனை விவேகானந்தா கேந்தாரவில் சில காலம் மணியாற்றினர் .தனது பத்திரிக்கை உலக அனுபவங்களை ஒரு பத்திரிக்கையில் ஒரு ஊடகவியாலன் கோடு தாண்டுகிறான் என்ற தலைப்பில் வந்தது . பத்திரிக்கையாளர்களுக்கு முன்னோடியாக மட்டுமில்லாமல் இவரைப் பல்கலைக்கழகங்கள் பத்திரிக்கைத் துறை பாடங்கள் குறித்து உரையாற்ற அழைக்க வேண்டும். 

கிட்டத்தட்ட இவருடைய பத்திரிக்கை காலங்கள் 1970களில் தொடங்கி 50 ஆண்டுகள் முடிவடைந்திருக்கும் என்று நம்புகிறேன்.    டி. என். கோபாலன் போன்றோர்  இருக்கும்   வரை   நியாயத்தின் குரல்களுக்கு பங்கம் வராது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
18.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் : தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது த...