Friday, April 10, 2020

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு மலை வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ..

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு மலை வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ..தப்பிய அரிய மூலிகை  தாவரங்களும் மான்களும்....

கோவில்பட்டி அருகே சுமார் 10 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு குருமலை வனப்பகுதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மூலிகை தாவர இனங்களும் மான்கள் உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன கோவில்பட்டி வனச்சரகத்தில் கட்டுப்பாட்டிலுள்ள குரு மலையை ஒட்டி மந்தித்தோப்பு மலை வனப்பகுதியில் இன்று மாலை திடீரென தீ பிடிக்க தொடங்கி சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தற்போது வெயில் காலம் சீசன் தொடங்கியுள்ளதால் மலைப்பகுதியில் காய்ந்து கிடந்த சருகுகள் புற்கள் தீயில் எரிந்தன. தகவலறிந்த தீயணைப்பு  வாகனம் மலையின் உச்சிப் பகுதிக்கு செல்ல முடியாததால் தீயணைப்பு வீரர்கள் நடந்தே சென்று காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் சிறிது நேரத்தில்  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீ பரவுவதைத் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர்.




No comments:

Post a Comment

அரங்கேற்றம் கதையை என் திரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன்.

  அரங்கேற்றம் கதையை என் திரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப்...