Thursday, April 16, 2020

#அது_ஒரு_காலம். #எல்லாம்_கடந்துப்_போகின்றன. #பார்ப்போம்....

#அது_ஒரு_காலம். 
#எல்லாம்_கடந்துப்_போகின்றன. #பார்ப்போம்....
————————————————
நீண்ட காலத்திற்கு  பிறகு  மூத்தப் பத்திரிக்கையாளர் குடந்தை  கீதப் பிரியன் பேசினார்.  நல்ல  நன்பர். அப்போது நான் குடியிருந்ந மயிலாப்பூர் சாலை தெரு வீட்டுக்கு  வருவார்.  இங்குதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னோடு தங்கி இருந்தார். அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் இங்கு அன்று எடுக்கப்பட்டது. கீதப் பிரியன் 1970-80, 90 வரை மணியனின் இதயம் பேசுகிறது, சாவி, வலம்புரி ஜான்  நடத்திய  தாய், கோமல்  சுவாமிநாதனின் சுபமங்களாவில் இவருடைய எழுத்துக்கள் குடந்தை கீதப் பிரியன் என்று 72 முதல் 95 வரை வாசித்ததுண்டு.  நன்கு எழதுவார்.




கல்கி ராஜேந்திரன், வலம்புரி ஜான், கீதப் பிரியனோடு அப்போது சாவியில் துணை ஆசிரியராக இருந்து இன்று தினமணி ஆசிரியராக  இருக்கும்  கே. வைத்தியநாதன், குமுதம்  பால்யூ, கல்கி ப்ரியன், விகடன் ராவ், மதன், சுதாங்கன் அனிதா பிரதாப்,மாலன் என பலர் அன்றைக்கு  நெருக்கமான பத்திரிக்கையாளர்கள்/நன்பர்கள் எல்லாம் நினைவுக்கு வந்தனர். 

கீதப் பிரியனின் பத்திரிக்கை அனுபவம் 50 ஆண்டுகள் இருக்கும். நல்ல நண்பர். காமராஜர், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம், இரா. செழியன், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், மத்திய முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம், நெடுமாறன் போன்றவர்களுடன் நெருக்கமாக இருந்து  பேட்டியெடுத்த  நல்ல பத்திரிக்கையாள நண்பர். அது ஒரு காலம். எல்லாம் கடந்துப் போகின்றன. பார்ப்போம்....

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
16.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...