Wednesday, April 29, 2020

வெள்ளாமை #செல்லமாக_வளர்க்கும்_நாய்களுக்கு #உணர்வு.....

#வெள்ளாமை 
#செல்லமாக_வளர்க்கும்_நாய்களுக்கு  #உணர்வு.....
————————————————-
வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்களுக்கு  உணர்வும்  பாசமும் அதிகமாக இருக்கும். நன்றாக நினைவிருக்கிறது பள்ளிக்கூடத்திற்கு செல்கின்ற காலத்தில் பள்ளி வரை பின்னாலேயே வரும், நன்பகல் உணவு நேரத்திலும், மாலை பள்ளி விடும் நேரத்தில் பள்ளிக்கூடத்தின் முன்னால் வந்து காத்திருக்கும். வெள்ளாமை ஆர்வம் எடுத்துக்கொண்டு நிற்க்கும்.இப்படி பல அதன் அரிய நடவடிக்கைகள்,பன்புகள்........
எங்கள் பகுதியில்  சிப்பிபாறை,ராஜபாளையம் வகை நாய்கள் முன்பு அதிகம் இருந்தது. இப்போது அவை அதிகமாக பார்க்க  முடியவிலை.



கோம்பை வகை உள்ளது.

பொங்கல் அன்று விடியலில் விவசாய நிலத்தில் ஈசான மூலையில் கன்னிப் பில்ளையும் வேப்ப இலைகள் கொண்ட கொப்பினை கொண்டு பொலி கட்டுவார்கள். அந்த இடத்திற்கு நமக்கு முன்னமே வேகமாக ஓடிச் சென்று நிற்கும். வீட்டில் யாராவது மறைந்து விட்டால் அது தரையில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். நாம் கொடுப்பதே வெறும் உணவு தான், ஆனால் அது காட்டும் நன்றியும் பாசமும் அளப்பறியது. 

இதைக் குறித்து *பெ. மகேந்திரன்* *வெள்ளாமை*என்ற *கரிசல் இலக்கிய புதினத்தில்*வருமாறு. இந்த புதினம் குறித்தான விமர்சனத்தை இன்றோ நாளையோ பதிவிடுவேன்.

‘’இந்த மாதிரியான நேரங்களில் வீட்டில் வளர்க்கும் நாய் கூட பாசத்தின் நிலைகொள்ளாமல் அங்கும் இங்கும் ஓடும். பெரியவர் வீட்டிலும் ஒரு நாய் இருந்தது. கரிசல் கிராமங்களில் பெரும்பாலும் எல்லாருடைய வீட்டிலும் நாய் இருக்கும். அது எதையும் கட்டிப்போட்டு வளர்க்க மாட்டார்கள். அது பாட்டுக்கு தெரியும். சாப்பாட்டுக்கு சரியாக வந்து நிற்கும். அது அந்த மண்ணுவாகோ என்னவோ எல்லாமே ‘ஓங்கு தாங்காக’ வளர்ந்து இருக்கும். இந்த ‘சிப்பிப்பாறை’ ஜாதி கூட அப்படித்தான்.

  வீட்டுக்குள்ளே எதுவரை வரலாம் என்பதை எஜமானரின் மனஓட்டத்தை வைத்து அறிந்து வாசலோ கூடமோ தனக்கென ஒரு எல்லையைச் சரியாக வகுத்துக் கொள்ளும். நஞ்சை, புஞ்சை, படப்பு, களத்துமேடு என இதில் எதுவெல்லாம் தன் எஜமானருக்குச் சொந்தம் என்ற விபரம் இந்த நாய்க்கு எப்படித்தான் தெரியுமோ, சரியாக அங்கெல்லாம் போய் ஒரு “கண்காணிப்பு” செய்துவிட்டு வாசலில் வந்து ஒரு தோரணையாக உட்கார்ந்துக் கொள்ளும். அங்கிருந்துக் கொண்டு “பெரிய பொறுப்புகளை”த் தலையில் சுமந்துகொண்டது போன்ற தோரணையில் தெருவைப்பார்த்து உட்கார்ந்துக் கொள்ளும்.’’

 - வெள்ளாமை #பெ_மகேந்திரன்

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.04.2020 
#ksrposts

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...