Thursday, August 26, 2021

#அரசியலில் வெற்றிபெற

 அரசியலில் வெற்றிபெற அனுபவம் முக்கியமான அம்சம்.அந்த அனுபவத்தை சேகரிக்கும் முறையிலும் கொஞ்சம் பிசகினாலும் அதை சரிசெய்வது மிக கடினம். இது முன்பு இருந்த நிலை.அப்போது தன் நலமற்ற தியாகம்இருந்தது.

இன்று வியாபார அரசியல்.பொறுப்பும், பதவியும் விலைபோகும் காலங்களில் கடந்தகால உழைப்பாளர்கள் உயர்த்தபடுவது மகிழ்வு இருந்தது. இப்போது ‘’அரசியல்லாட்டரி"தான்…தகுதியற்ற யாரும் எவ்வித உழைப்பற்று

அவர்கள் விரும்பும் இடத்திற்க்கு வரலாம்.
••
அரசியல் மேடை பேச்சாளர்கள் மீது எனக்கு பெரும் ஆயாசம் உண்டு. எல்லா மேடைகளிலும் ஒரே விஷயத்தைப் பேசுவது, பேசவேண்டுமே என்பதற்காகப் எதையும் பேசுவது, பிறரைத் தாழ்த்திப் பேசுவது என இயல்புக்கு மீறி உணர்ச்சிவசப்படுவார்கள்.
மக்களுக்காக நாட்டுக்காக அவர்களின் பாதுகாப்பிற்கு மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் ஏழை எளியோர், இயற்கையை பாதுகாக்க எந்த திட்டமும் தீட்டாமல் இந்த மாதிரி விஷயங்களில் இன்றைய அரசியல்யளர்கள் ஈடுபட்டுக்கொண்டு யுத்தம் செய்து கொண்டு இருப்பதை பார்த்தால் மக்களுக்கு சலிப்பு தட்டிவிடும்.
(படம்- வினோபா)
26-8-2021.

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...