Wednesday, August 25, 2021

#இன்று_உத்தமர்_ஓமந்தூரார்_நினைவு நாள்


 #இன்று_உத்தமர்_ஓமந்தூரார்_நினைவு நாள்! திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள்!

ஓமந்தூரார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபின், அரசியல் களத்திலிருந்து முற்றிலுமாக விலகினார் ஓமந்தூரார். ராஜாஜியின் சுதந்திரா போன்ற சில கட்சிகளின் அழைப்பு, தேடி வந்த கவர்னர் பதவி உட்பட்ட எல்லா அரசியல் நிலைப்பாட்டையும் புறக்கணித்தார்!
தனது இரண்டாம் கட்ட ஆன்மிக வாழ்வைத் தொடங்க, 1951-ல் வடலூர் சென்று வசிக்கத் தொடங்கினார். கல்வி நிலையங்கள், அற நிலையம், அநாதை இல்லம் தொடங்கினார். வாரியார் சுவாமிகள் அப்போது, அங்கு சத்திய ஞான சபை திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். அந்தத் திருப்பணி குழுவில் இணைந்து பணியாற்றினார். இருவருக்கும் இறுதி வரை பரஸ்பர அன்பும் மரியாதையும் இருந்தன. ஓமந்தூரார், தன் வாழ்நாளில் பிறரிடமிருந்து இலவசமாக வாங்கிக் கொண்ட ஒரே அன்பளிப்புப் பொருள்- வாரியார் சுவாமிகள் வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த ஒரு மர ஊன்று கோல் மட்டுமே! அறம் வழுவாது வாழ்ந்த பெரியோரின் புகழ் போற்றுவோம்….
( படத்தில் வாரியார் சுவாமிக்கு மூன்றாவதாக சட்டையின்றி இருப்பவர் ஓமந்தூரார். சத்திய ஞான சபை குடமுழுக்கில் எடுத்த படம் இது! )
நன்றி:நேசமிகு ராஜகுமாரன்

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".