———————————————————-
எட்டையபுரம் வட்டம் கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்தவன் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறை கேட்ப்பு கூட்டம் ஆங்கில மாதம் கடைசி வியாழன் அன்று நடைபெறுகின்ற கூட்டத்தில் கலந்து கொள்பவர்களில் ஸ்ரீவைகுண்டம் நயினார் குலசேகரன், எட்டையபுரம் காஜாமைதீன் என்ற உமர்பாய், மாசார்பட்டி கணபதிராமன், நம்பிபுரம் இராமகிருஷ்ணன் வரிசையில் சித்தவனும் ஒருவர். மேற்கண்டவர்கள் வயது மூப்பு காரணமாக நம்மிடம் இல்லை. அதில் உமர் பாய், சித்தவன் ஆகிய இருவர் மட்டும் நம்முடன். இனாம் அருனாசலபுரம், தோல் மலைப்பட்டி, முத்துலாபுரம் வீரப்பட்டி என 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் செம்மறிஆடுகள் உள்ளன. மழைக்காலங்களில் இவைகள் ஆங்காங்கு குளம், குட்டை, நீர் நிலைகளில் குடிநீர் பருகுகின்றன. கோடையில் குளம் குட்டைகளில் கடும் தண்ணீர் பஞ்சம், வறண்டு காணப்படும். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோடையில் கால்நடைகள் குடிநீருக்காக விவசாயம் செய்யாமல் தனது தோட்டத்து கிணற்றில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சி அக் கால்நடைகளுக்கு குடிநீர் கொடுத்து வருகிறார். அது மட்டுமல்ல அக்கிராமத்தில் சாலையோரம், கோவில், பள்ளி, குளக்கரைகளில் சுமார் 216 செடிகள் நட்டி மரங்களாக்கியுள்ளார்.ஐயா சித்தவன் வயது 85 மனமார பாராட்டுவோம். தெக்கத்தி கரிசல் மனுசங்க.
No comments:
Post a Comment