#இப்படிதான்_இந்தியா_துணைக்கண்டம்_என்றால்_என்ன_சொல்ல
———————————————————-
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா கடந்த 75-வது நாட்டின் விடுதலை நாளில் பேசியதும், நேற்றைக்கு (18.08.2021) ஊடகங்கள் தனதுபோக்கில்யூகங்களைச்செய்திக
ளாக வெளியிடுவது வேதனையான விஷயமாகும்.
விடுதலை நாளன்று பேசியபோது, நாடாளுமன்றம் விவாதம் இல்லாமல் முடக்குவது குறித்துத் தனக்குக் கவலை தருகிறது என்று உருக்கமாக பேசி
யிருந்தார்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுவது வேதனை அளிக்கிறது என்று பகிரங்கமாக கூறியது, மோடி அரசின் மீதான கடும் விமர்சனமாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு அறிவுப்பூர்வமான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடந்தன என்று குறிபிட்ட தலைமை நீதிபதி, அந்த விவாதங்கள், சம்பந்தப்பட்ட சட்டங்களின் உட்பொருள் என்ன என்பதை அறிந்துகொள்ளவும், ஒரு குறிப்பிட்ட சட்டம் எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளவும் நீதிமன்றங்களுக்கு உதவின என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதை மேலும் விளக்கிய அவர், ஓர் உதாரணத்தை குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தொழிற்தகராறுகள் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்ற போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.ராமமூர்த்தி அந்த விவாதத்தில் பங்கேற்று மிக விரிவான முறையில் சட்டத்தைப் பற்றி உரையாற்றியதை நீதிபதி ரமணா சுட்டிக்காட்டினார்.
ஆனால் இப்போது, மிகவும் மோசமான ஒரு நிலை நிலவுகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற சட்டங்கள் பெரிய அளவிற்கு பேதமை கொண்டவையாக, நிறைய இடைவெளிகள் கொண்டவைகயாக இருக்கின்றன. இந்த சட்டங்களைப் பற்றி ஒரு தெளிவு இல்லை.
நாடாளுமன்ற அவைகளில் அறிவுஜீவிகளும், வழக்கறிஞர்களும் இல்லாத நிலையில் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. இது தொடர்பாக மேலும் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்வேன்.
இது சமூக வாழ்விலும், பொது வாழ்விலும் இந்தியாவின் சட்டசமூகம் தலைமையேற்க வேண்டிய ஒரு தருணம் என்றும் தலைமை நீதிபதி ரமணா கூறினார்.
இவரின் பேச்சு கவனிக்கப்பட வேண்டியது. இது தான் இந்தியாவின் இன்றைய நிலை. தகுதியற்ற சிலர் இம்மாதிரி தளங்களில் வந்துவிடுவதால் நாடாளுமன்றமும், நாடாளுமன்றத்தின் செயல்பாடும் சரியாக இல்லை ஊடகங்களும், செய்தித்தாள்களும் பத்திரிக்கை தர்மம் இல்லாமல் தன் விருப்பம் போல நடுநிலை இல்லாமல் சென்று கொண்டுதான் இருக்கிறது. தகுதியற்றவர்களையும் பரிகாசத்துக்குறியவர்களையும் மக்கள் கொண்டாடும் போது என்ன சொல்லமுடியும். மக்கள் தான் இதை கவனிக்க வேண்டும்.
No comments:
Post a Comment