#துக்கத்தின்_நீட்சிதான்_மகிழ்ச்சி.
———————————————————-
இன்று பொதுத்தளத்தில் இயங்கிவரும் அனைவரும் அறிந்த ஒரு பெண் பிரமுகர், என் பொதுவாழ்வைக் குறித்தான விடயங்களை எழுதிய கடிதத்தில் ஒரு பகுதியில், இது தத்துவமில்லை, இப்படித்தான் கடக்கின்றேன் எனச் சொல்லப்பட்ட விஷயம் கவனத்தை ஈர்த்தது.
••••••••••••
‘’பிறப்பு சீருடன், செல்வத்துடன்.
அதீத பிடிவாதம்,நினைத்ததை
அடைந்திடும் வைராக்கியம்
கற்றல்,தேடல்..,உழைப்பு ,எதிலும் தீவிரம்…..’’
‘’இந்த உலகத்திற்கு இக்காலத்திற்கு தேவையில்லாத நேர்மை, ஒழுக்கம் மனிதனின் வாழ்நாள் முழுவதற்கும்
தேவையான உழைப்பைத்
தந்துவிட்டாய் சற்றே ஓய்வெடு
என்கிறது இயற்கை.
நினைவுகளைக் கோணிப்பையில்
நிரப்பியவாறு இன்னும் தேடலில்
கற்றலில் ,ஓயாத சுற்றலில்
அவ்வப்போது கோணிப்பையைத்
திறந்து நினைவுகளை ஒவ்வொன்றாய்
தடவியவாறே பயணிக்கிறாய்
வேதனையுடன் வேடிக்கை
பார்க்கிறது காலமும்...!’’
துக்கத்தின் நீட்சிதான் மகிழ்ச்சி.
எல்லாம் காலச்சூழல்கள்தான் என எடுத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment