Wednesday, August 25, 2021

#Destructive_artificial_useless_stock.

———————————————————
அரசியல்களம், திரைத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்மணிகளின் பெயரைப் போட்டு, அவர்களுடைய ஆர்மி என சமூக ஊடகங்களில் வலம்வருவது வேடிக்கையாகத் தெரிகிறது. பகுத்தறிவு என்று பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியெல்லாம் அபத்தங்கள். இம்மாதிரி சமூகவளைதளங்களில் வலம்வருவது தன் புகழ் பாட செலவு செய்து ஏற்பாடுச் செய்யப்பட்டது. என்று பொதுவான கருத்து இருக்கின்றது.
சரி,இதுவும் ஒரு பாசாங்கு போலித்தனம். வேறென்ன சொல்வது.
இதுபோலவே தொலைக்காட்சி விவாதங்களில் சமூக சேவகர்கள், கருத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், சிந்தனையாளர்கள் என்று வகைப்படுத்தி விவாதத்தில் தூக்கி அமரவைப்பது எல்லாம் வேடிக்கையாக உள்ளது. சமூகசேவகர் என்பதை இன்றைக்கு புரியாத புதிராக்கிவிட்டார்கள். எந்த காற்றடித்த பலூனையும் கையிலிருந்து மேலே உயர்த்தினால் சிறிதுநேரம் பறக்கும். அப்படிதான் இவைகளும். இவை எல்லாம் Destructive artificial useless stock.அவ்வளவுதான்.
25-8-2021.


 

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...