Friday, August 13, 2021

#மிளகாய்

 #மிளகாய்

—————-
உலகமே மிளகாயின் தேவைக்கு இந்தியாவைதான் நம்பி இருக்கிறது. சீனாவுக்குகூட இந்தியாவில் இருந்துதான் மிளகாய் செல்கிறது. மிளகாய் உற்பத்தியில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இந்திய அளவில் சிறந்து விளங்கின. வடஇந்திய வியாபாரிகள் எல்லாம் தமிழகத்திற்கு வந்துதான் மிளகாய் கொள்முதல் செய்தார்கள். அந்த அளவுக்கு இங்கு அதிகமாக விளைந்தது. இப்போது மிளகாய் உற்பத்தி தேசிய சராசரியில் தமிழகம் 2 என்ற சதவீதத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. அதாவது ஒரு சதவீதம்கூட இல்லை. அதே நேரம் தெலுங்கானா மாநிலம் தேசிய சராசரியில் 35 சதவீத பங்களிப்பை தமிழகத்தில் சராசரியாக ஒரு ஏக்கரில் 400 கிலோ மிளகாய்தான் கிடைக்கிறது. தெலுங்கானாவில் ஒரு ஏக்கரில் 4,500 கிலோ மிளகாயை அறுவடை செய்து விடுகிறார்கள். அவர்கள் உயர் ரக விதைகளை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறுகிறார்கள்.
தமிழகத்தில் மண் வளமும், சீதோஷ்ணநிலையும் மிளகாய் சாகுபடிக்கு மிக ஏற்றதாக இருக்கிறது. அவைகளை பயன்படுத்தி தமிழகத்தில் மீண்டும் மிளகாய் உற்பத்தியை பெருக்கி, இழந்த பெருமையை மீட்க இந்த சிவப்பு புரட்சியை முன்னெடுத்திருக்கிறோம்.
நெல் பயிரிட்டு, அதில் இருந்து ஒரு கிலோ அரிசி வீட்டிற்கு வருவதற்கு 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனாலும் நெல் விலை குறைவு. ஒரு ஏக்கரில் நெல் பயிரிட்டால் அதிகபட்சம் விவசாயிக்கு பத்தாயிரம் ரூபாய் தான் லாபம் கிடைக்கும். ஆனால் அதே ஒரு ஏக்கரில் மிளகாய் பயிரிட்டால், அதனை இரண்டு முதல் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனைசெய்து, அதில் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். அதனால்தான் நெல்லில் இருந்து மிளகாய் பயிருக்கு விவசாயிகளை மாற்றி, இயற்கை வழி வேளாண்மையை நடைமுறைப்படுத்தினோம்.
எங்கள் வானம் பார்த்த கரிசல் கந்தக பூமியில், நிலங்களில் மிளகாய், பருத்தி, எள் மற்றும் சில இடங்களில் நிலக்கடலை பயிரிடுவது உண்டு. இதில் மிளகாயும், பருத்தியும் தான் அதிகம். மிளகாயை காயப்போட்டு பக்குவப்படுத்தி தனியறையில் பாதுகாத்து நல்ல விலைவரும்பொழுது சங்கரன்கோவில், சாத்தூர், கோவில்பட்டி கமிஷன் கடையில் சென்று விற்பது வாடிக்கை. அதே போல பருத்தியையும் பக்குவப்படுத்தி கீழே மணல் போட்டு அதற்கு மேலே பருத்தியை தனியறையில் பாதுகாத்து நல்ல விலை வரும்பொழுது விற்பது வாடிக்கை.
மிளகாய், பருத்தியை பெரிய தாட்டு சாக்கில் அடைத்து டிராக்டர் வண்டியிலும், மாட்டுவண்டியிலும் கொண்டு சென்றதெல்லாம் அந்த காலம். இப்போது இம்மாதிரி காட்சிகளை காண்பதே அரிதாகின்றது. ஒரு சில விவசாயி வீடுகளில் இதே நிலமை இன்றைக்கும் நீடிக்கின்றது. தமிழகத்தின் பெருமையை மீட்கும் சிவப்பு புரட்சி.
13-8-2021.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...