———————————————————-
ஆப்கான் பிரச்சனையில் கடந்த 1980-களில் இருந்து இன்றுவரை, கவனித்து வந்த நிலையில், மனதில் எழுந்த வகையில் கோட்பாடு ரீதியாக அங்கே நடந்தது ஆதிக்க அரசியல், தன்நல அரசியல், வியாபார அரசியல், குழு அரசியல்கள். ஆனால் அங்கு மாற்று அரசியலோ, விளிம்புநிலை அரசியலோ, வெகுஜனநல அரசியலோ தென்படவில்லை. இதே நிலமை தான் எல்லா அரசியல் தளத்திலும் எங்கும் நடக்கின்றன.
அந்தந்த நேரத்திற்கான நியாங்கள் என்று சிலர் சப்பைகட்டுகள் கட்டுகின்றனர். இயற்கை நீதியை மீறிய செயல்பாடுகளே உள்ளன.
ஆப்கான் பிரச்சனையில் அறிந்த கோட்பாடுகளும் நமக்கு அளித்த செய்திகளும் (Messages) இவையே.
நுண் அரசியல், in Bit win Lines என்ற அணுகுமுறையில் மேலே குறிப்பிட்ட அரசியல் போக்குகளில் பல படிமானங்கள், விழுமியங்கள், நமக்கான படிப்பிணைகள் நம்முன் வருகின்றன.
இது ஆப்கான் பிரச்சனையில
மட்டுமல்ல எல்லா தளத்திலும் இப்படிதான். பொது வாழ்வில் களப்பணி, உழைப்பு என்பது ஒரு காரணிதான். அதற்கு மேல் போலி பாசங்குத்தனங்கள் தான் முன்னிலையில் இருக்கின்றன.
ஆப்கான் பிரச்சனை, இலங்கையில் அமைதி படை சென்றுவந்தது, இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது அங்கு நடந்த முள்ளிவாய்க்கால் போன்ற நிகழ்வுகள், அந்தந்த தளத்தில் நடந்தது மட்டுமல்ல அதன் தாக்கங்கள் அரசியல், பன்னாட்டு உறவுகள், பொதுவாழ்வுக்கு நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகின்றன. அதனால் பதவிகளும், பொறுப்புகளும், அங்கிகாரங்களும் பெற களப்பணிகள் மட்டுமில்லாமல் வேறு சில கேடான தந்திர உபாயங்கள் இருந்தால் மட்டுமே பெறப்படும் என்று சொல்வது சரியல்ல. வாங்க முடியும். இதுவே இன்றைய அரசியல். இதுவே இன்றைய உலக அரசியலிருந்து கிராம பஞ்சாயத் அரசியல் வரை…
நேர்மறை எண்ணங்கள் மட்டும் போதுமானதல்ல ,
நேர்மறை உணர்வுகளும், செயல்களும் வேண்டும்
வெற்றி என்னும் இலக்கை அடைவதற்கு.
“ Time changes everything except something within us which is always surprised by change.”
-Thomas Hardy
No comments:
Post a Comment