*#மதுரை_ஆதீனம்_காலமானார்..!*
சைவமும் தமிழம் என பணி…ஈழத்தமிழர்
நலனில் கடமை ஆற்றியவர்.
1979 ல் அறிமுகம்.என்னுடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்
திருநெல்வேலி மாவட்டம். (உடன்குடி)
தஞ்சை மாவட்டத்தில் அன்று
பத்திரிகையாளர்.
செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், பழைய ஆவணங்களை எல்லாம் தொகுத்து மதுரை ஆதீன வரலாற்றை 2007ம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டார் அருணகிரிநாதர். அதைஎனக்கு அனுப்பி அதுகுறித்துகருத்தையும் கேட்டார்.
அதில் "திப்பு சுல்தான் மதுரை ஆதீன மடத்துக்கு நேரில் வந்து அன்றைய ஆதீனம் (282) பாம்பணிநாத ஞானசம்பந்த தேசிகரிடம் உரையாடி, பூஜைக்குரிய வெள்ளித் தாம்பாளங்கள், தோல் முரசு, வெள்ளித் திருச்சின்னம், புனுகு, ஜவ்வாது, உயர்ந்த வகை அரபு நாட்டு அக்தர் வகைகள், வெள்ளி வாள் ஆகியவற்றுடன், ஆண் யானை ஒன்றையும் பரிசளித்தார்"என்ற குறிப்பு உள்ளது.இலங்கை திருகோணமலை தொடர்புகள் பற்றி கூறுகிறார்.
"மதுரை மீது படையெடுத்து வந்த ஔரங்கசீப்பின் மாலிக்காபூர் அன்றைய ஆதீனம் (237) வேலாயுத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இரண்டு குதிரைகளை பரிசாக வழங்கியது" பாண்டிய மன்னர்கள், நாயக்கர் மன்னர்கள் வரலாறு மற்றும் ராபர்ட் டி நோபிலி, சீகன் பால்கு, வீரமாமுனிவர் போன்ற கிறிஸ்தவர்கள மதுரை ஆதீனத்துக்கு வந்த செய்தியையும், அவர்களின் பணிகளை அந்த நூலில் தொகுத்துள்ளார் அருணகிரிநாதர்.
'செய்யுள்நிகழ் சொல்தெளிவும்
செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே
எனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார்
மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை யில்லாத புலவர்எனப் புகழ்மிக்கார்' - பெரிய புராணம்.
ஆழ்ந்த இரங்கல்.
#ksrpost
14-8-2021.
No comments:
Post a Comment