Sunday, August 15, 2021

#தேவதைகள்_நுழைய_அஞ்சுகிற_இடத்தில்_மிருகங்கள்_தாராளமாக_நுழைந்துவிடுகின்றன.

#தேவதைகள்_நுழைய_அஞ்சுகிற_இடத்தில்_மிருகங்கள்_தாராளமாக_நுழைந்துவிடுகின்றன.
———————————————————-
சிறந்த புத்தகம் எது என்று என்னை ஒரு முறை ஒருவர் கேட்டார். சிறந்த புத்தகம் எதுவென்றால் தூக்கம் வரவேண்டும் என்பதற்காக நீ ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டி, அந்தப் புத்தகம் உன்னைப் புரட்டிப் புரட்டித் தூங்கவிடாமல் விழித்துக்கொள்ளப் பண்ணுவதாக இருந்தால் அதுவே விழுமிய புத்தகம் என்பது எனது பதிலாக இருந்தது. 

அதைபோலவே கேரளத்தில் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் கதை எனக்குப் பிடிக்கும். பாத்தும்மாவுடைய ஆடு என்று கருதுகிறேன். அதை நான் வெகுவாக நேசித்தது உண்டு. கேசவ தேவ் அவர்களின் கண்ணாடி இப்பொழுதும் எனக்கு நினைவிலே இருக்கிறது. மலையாளம் எனது கனவுகளின் பூமியாக இருந்து வந்திருக்கிறது. அமுல் பேபி மாதிரி அழகான பெண்கள் அன்கே இருக்கிறார்கள். தென்னை மர நிழல்களில் வளர்ச்சியடைந்த பெண்கள் எப்போதுமே வசந்தங்களாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் வருடத்தின் இறுதிக் காலத்தில் டிசம்பரில் கேரளத்திற்கு பயணப்படுவது வழக்கமாக இருந்தது. நான் இயற்கையான இப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று என்னை மறக்க அலைவது உண்டு.அது போல பிரம்மபுத்திரா நதி தீரம், ராஜஸ்தானின்
உதய்ப்பூர்-தார் பாலை மணல் நிலங்கள்
என பல இடங்கள்.

இங்கெல்லாம்தான் நான் இதுவரைக்கும் யாத்திரை மேற்கொண்டு இருக்கிறேன் என்றாலும், நிகழ் கால அரசியலில் தங்கள் வீடுகளுக்கு வந்ததையே, அதிலும் அவர்கள் அழைத்து வந்ததையே யாத்திரையாக வந்தார் என்று சிலர் சொல்லப் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யாத்திரையாக என்று சொல்லுகிறபொழுது தங்களது இல்லங்களைப் புனிதத் தலங்களாக மாற்றப் புறப்பட்டிருக்கிறார்கள் என்று தான் எனக்குச் சொல்லவருகிறது. ஜெருசலேமும், மெக்காவும், காசி மாநகரமும் யாத்திரைத் தலங்களாக இருக்கலாமே தவிர, சாதாரண இடங்கள் யாத்திரைத் தலங்களாக ஆகிவிட இயலாது. 

தேவதைகள் நுழைய அஞ்சுகிற இடத்தில் மிருகங்கள் தாராளமாக நுழைந்துவிடுகின்றன என்கின்ற பழமொழி தான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. ஆசைகள் குதிரைகள் ஆகிவிட்டால், அற்பர்களே சவாரி செய்வார்கள் என்றும் கூட ஆங்கிலத்திலே ஒரு பழமொழி இருக்கிறது. இந்தக் காலத்தை நான் நினைத்துப் பார்க்கிறபோது பொற்றைக் காட்டுக்கு ஞானபீடம் கிடைத்ததும்.
1980 ஆம் வருடம் ஞானபீடப் பரிசு எழுத்தாளர் எஸ்.கே.பொற்றைக்காடு அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது அவர்களுக்கு 68 வயதாக இருந்தது. கோழிக்கோட்டில் உள்ள ஒரு கிராமத்தின் பள்ளியில் ஒரு எட்டாம் வகுப்பு வாத்தியார். கே.சி.குட்டப்பன் நம்பியார். சங்கரன் குட்டி என்ற மாணவனின் வியாச நோட்டை திருத்திய போது, அவருக்கு ஒரு ஆச்சரியம் அதில் உட்கார்ந்து இருந்தது. அந்தப் பதினாறு வயதில் ஒரு அற்புதமான சிறுகதையை அந்தப் பையன் அதில் எழுதி இருந்தான். அந்த எழுத்து அவன் வயதுக்கு மீறிய அறிவின் பிரதிபலிப்பு. குட்டப்பன் அவனை வாயாரப் பாராட்டினார்.
எதிர் காலத்தில் நீ பெரிய எழுத்தாளன் ஆகப் போகிறாய் என்று வாழ்த்தினார். இன்று ஆகிவிட்டார். 54 வருடங்களுக்கு முன் அவர் வாழ்த்தியது ஞானபீடமாக இன்று அவரை உயர்த்தி விட்டது.. குஞ்சுராமன் என்கிற பள்ளி வாத்தியாராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1929-ல் முதல் சிறுகதையைத் தீபா வார இதழில் எழுதினார். அது இந்து முஸ்லீம் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. சிறுகதை, நாவல், பயணக் கட்டுரை, கவிதை என்று பொற்றைக்காடின் சிந்தனை பல வடிவங்களில் வழிந்து வந்தது. அவரது எழுத்துகள் உலக மொழிகளில் ஏராளமாக மொழி பெயர்க்கப்பட்டுப் புகழ் சேர்ந்தது. 1949-ல் முதல் நாவல் நாடன் பிரேமம் கிராமத்தைச் சுத்தமாக – சுகமாகக் காதலிக்கிற நாவல். 100 சிறுகதைகள் 27 நாவல்கள், 15 கட்டுரைகள், 23 சிறுகதைத் தொகுப்புகள், உலகம் சுற்றிய தனது அனுபவங்களைப் பயணக் கட்டுரையாக அவர் எழுதி இருக்கிறார். கேரளக் கற்பனையாக மட்டுமே இல்லாமல் அவரது பார்வை விரிய ஆரம்பித்தபோது, தமிழ் நாடு அவரைப் புரிந்து கொண்டது. 1948-ல் அவரது விஷகன்னிகாவுக்குப் பரிசளித்துக் கௌரவித்தது. அன்றைய பிரதமர் நேரு அவர்கள், இவரை நண்பராக்குக் கொண்டார். அவர் மூலம் இந்திய அரசியலில் பொற்றைக்காடு பங்கு பெற்றார். தலைச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கு 62-ல் சுயேச்சையாக நின்று அவர் வெற்றி பெற்றார்.இன்றைக்கு இப்படி தகுதியானவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடியுமா?

ஒரு தேசத்திண்ட கதா என்கிற புத்தகத்திற்குத் தான் கேரள சாகித்ய அகடாமி 1962-லே பரிசளித்து மகிழ்ந்தது. சரியாகப் பத்து வருடங்கள் கழித்து இந்திய சாகித்ய அகாடமி அதே நாவளுக்கு மீண்டும் பரிசளித்துப் பூரித்தது. அதே ஒரு தேசத்திண்ட கதா வுக்காக ஒரு லட்சம் பரிசளித்துத் தனக்கு மாலை போட்டுக் கொண்டிருக்கிறது ஞானபீடம். இந்தியாவினுடைய அவலங்களையே படம்பிடித்துக் காட்டிப் பிழைப்பவர்கள் நடுவில்,  இந்தியாவின் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் காட்டும் ஒரு எழுத்தாளர் பொற்றைக்காடு. பூவன்பழங்கள், நிஷாகந்தி, நான் பிறந்தன்னால், ஆகிய இவரது படைப்பகள் உலகமொழிகளில் உலகத்தின் இலக்கியப் பேரேடுகளில் அவரை இடம்பெற வைத்திருக்கிற அதிசயங்கள். கனவுகளின் பூமி ஆன கேரளத்தில், சிறகடித்து பெருமை சேர்க்கும் இந்த வானம் பாடிக்கு நோபல் பரிசு தரவேண்டும் என்று நான் வாழ்தியது நினைவு இருக்கிறது. என்றாலும் நோபல் பரிசு வாங்குவதற்கு அவர் இல்லை. அவர் இன்றைக்கு எழுதியவைகளின் மூலமாக வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. அப்போது கிரா
நினைவும் வந்தது…


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...