———————————————————-
நாட்டின் விடுதலை போராட்டக்களத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி பல புதினங்கள் வந்தன. அவற்றில் கல்கியின் அலை ஓசை.அந்த படைப்புகள் சில மறுப்பதிப்பு ஆகாமலேயே நின்றுவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த விடுதலை வேள்வியைப் பற்றி ’கல்லுக்குள் ஈரம்’ என்ற படைப்பை ர.சு.நல்லபெருமாள் வெளியிட்டார். ர.சு.நல்லபெருமாள் எழுதிய இந்த நூல் வானதி பதிப்பகம் வெளியிட்டு தூர்தசன் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்டது.
சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம் (அன்றைய மதுரை பகுதியில்) என்ற படைப்பு மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இப்போது இரண்டாவது பதிப்பு டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விடுதலை வேள்வியைபற்றி அலையன்ஸ் பதிப்பகம் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளது. சுதந்திர போரைக்குறித்தான படைப்புகள் பல 1970 வரை வெளிவந்தன. நாமக்கல் கவிஞர், அகிலன், நா.பார்த்தசாரதி, திரவியம்(ஐ.ஏ.எஸ்), ராஜலிங்கம் என பலர் விடுதலை மற்றும் தேசிய கட்சிகள் சார்ந்த பல புதினங்களை படைத்துள்ளனர் என்பதை இந்த 75-வது விடுதலை நாளில் நினைவு கொள்ள வேண்டும்.
#KSRposting
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15.08.2021
No comments:
Post a Comment